வழிபாட்டு முறை

'' கருமணி உண்டு சொற்காயம்பு மேனி கருணை உண்டு 
ஒருமணி உண்டு  என் உள்ளத்திலே உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவி கோடி சூரியப்ரகாச குரவி உண்டு
திருமணி உண்டு ஹரி ஓம் நமோ ராமானுஜாய என்ற தெய்வம் உண்டு''

கேள்வி :நமது கோவிலில் பெரியசாமியாக சங்கு சக்கரத்துடன் கூடிய திருமேனி கொண்ட பெருமாளை வழிபட்டு வருகிறோம் ஆனால் திருமணி மாலையில் ''சிவகடாட்சம்'' என்று வ்ருகிறதே..!! அப்படியானால் நமது கோவில் சைவ வழிபாட்டு கோவிலா ??

பதில்::  நமது குலதெய்வம் ஐந்துவீட்டு சுவாமிகளின் வழிபாட்டு முறையினை ஆராய்ச்சி செய்தோமானால் ''சித்தர்''களின் வழிபாட்டு முறை போல்  குரு சிஷ்ய பரம்பரை கொண்ட கோவிலாக உள்ளது. கோவிலில் தெய்வங்களுக்கு உருவமில்லை, (பெரியசாமிக்கு சுமார் 1955 ம் ஆண்டு வாக்கில்தான் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது) ஆகம விதிகள் எதுக்கும் கட்டுபடாத புரட்சிகரமான கருத்துகளை வழிபாட்டு முறைகளாக கடைப்பிடிக்கும் கோவிலாக இருந்து வருகிறது. வைணவ கோவில் ஆனால் வைணவ வழிபாட்டு முறை கிடையாது, சரி சைவ வழிபாடு இருக்கான்னா..? அதுவும் இல்லை, இரண்டு வழிபாட்டு முறைகளுக்குள்ளும் முறைபடுத்த இயலாத வழிபாட்டு முறையை கொண்டுள்ளது, இங்கு பணிவிடை பூஜைகளின் போது பெண்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது, பொதுவாக பெண்கள் மாதவிலக்கின் போது கோவிலுக்குள் செல்ல கூடாது என்பது ஐதீகம் ஆனால் நமது கோவிலில் எந்த விலக்கும் இல்லை, கருவறை செல்லலாம், அதே போல் கர்பமான காலங்களிலும் பெரும்பாலான கோவில்களுக்கு பெண்கள் செல்வதில்லை ஆனால் நமது கோவிலில் கர்பமான பெண்களுக்கு இரண்டு பிரசாதம் அதாவது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து  வழங்கப்படுகிறது, எல்லா கோவில்களிலும் பூசாரி தட்டில் பணம் வாங்குவார்கள் ஆனால் இங்கு அண்ணாவி (பூசாரி) எந்தவிதமான அன்பளிப்புகளையும் வாங்குவதில்லை, பக்தர்கள் அனைவரும் ஒரே விதமாகவே நடத்தப்படுகிறார்கள், பெரியசாமி அவதாரத்தை நிறைவு செய்யும் போது ''பஞ்சபூதங்களுடன்  கலந்துவிட்டார்'' சித்தர்கள் இறப்பதில்லை சமாதியாவார்கள், வள்ளலார் கூட பஞ்சபூதங்களுடன் கலந்ததாக வரலாறு, இன்னும் சற்று உன்னிப்பாக கவனித்தோமானால்  முகமது நபி , புத்தர் போன்றோர்கள் வழிபாட்டு முறைகள்  கூட இதை அனுசரித்தே இருக்கிறது. அதனால் நமது கோவில் வழிபாடு சித்தர்கள் கோவிலாக ஆதி காலத்தில் இருந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளது,  ''கருமணி'' என்பதற்க்கு மூலாதாரம் என்றும்  பொருளுண்டு அதேபோல் '' சிவகடாச்சம்'' என்பதற்க்கும், திருமணி மாலையில் உள்ள அத்தனை பாடல் வரிகளுக்கும் பல அர்த்தங்கள் உள்ளடங்கியே உள்ளன, அதை முழுவதும் புரிந்தவர்கள் அதற்க்கு விளக்கம் தந்தால் இன்னும் முழுமையாக இருக்கும், பூஜையின் போது நடைமுறைகள் சித்தர்கள் உபதேசம் செய்யும் விததிலேயே இருக்கிறது. 


குலதெய்வம்

குலதெய்வம் என்றாலே ஒரு சாதியினர் மட்டுமோ அல்லது ஒரு வகையினர் மட்டுமோ வணங்கி வருவார்கள் இதுதான் நடைமுறை ஆனால் முன் காலத்திலேயே நமது குலதெய்வம் பெரியசாமி ஆன்மீகத்தில் பிராமணர்களின் அடக்கு முறையை எதிர்த்து மற்றவர்களுக்கு சுயமரியாதையை ஏற்ப்படுத்தியவர்🤔 அதனால்தான் நமது கோவிலில் சாதி பாகுபாடு இல்லாமல் ''அனைத்து சாதியினரும் குலதெய்வமாக'' வழிபட்டு வருகிறோம். நமது குலதெய்வம் நல்ல சமுதாயத்தின் முன்னோடியான வாழ்க்கை முறை வழிகாட்டி...

குதிரைசாமி

குதிரைசாமி, தீயவற்றை உடனடியாக அழித்து நம்மை காக்கும் துடியான தெய்வமான  ஆத்திசாமியின் வாகனம். இவரிடம் வேண்டுதல் வைத்தால் நம் கோரிக்கை உடனடியாக நிறைவேற உதவி புரிகிறார்..