முன்பு ஒரு காலத்தில் இன்றைய ஆத்திகோவில், ஆதிகோவிலாக (பழைய) இருந்த பொழுது, மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதி ஒருவன் தினசரி ஆகாய மார்க்கமாக வந்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான், ஒரு நாள் பெரியசுவாமிகள் கோயிலுக்கு சென்றார், அங்கே பூட்டப்பட்டிருந்த கோயில் கதவுகளின் மேல் தனது கையை வைத்தார் உடனே திறந்து கொண்டது, உள்ளே சென்ற சுவாமிகள் பூஜைகள் செய்து விட்டு திரும்பினார், பிறகு கதவு தானே தாள் இட்டுக்கொண்டது, வழக்கம் போல பூஜை செய்ய வந்த மந்திரவாதி, கதவை திறந்து உள்ளே சென்றான் சாமிக்கு பூஜை செய்துள்ளதை பார்த்து பூட்டிய கதவுகள் அப்படியே இருக்க யார் உள்ளே வந்திருக்க முடியும் என மந்திரவாதி குழம்பினான், கோயில் அருகில் தங்கி இருந்த பெரியசாமிகளிடம் சென்று பூஜை செய்தது யார்? எனகேட்டான் அதற்க்கு சாமிகள் ''தான்'' தான் என்பதை ஒப்புக்கொண்டார், மந்திரவாதி இனிமேல் இந்தமாதிரி பூஜை செய்யக்கூடாது என மிரட்டிவிட்டு சென்றான்.
மறுநாள் பூஜை செய்ய மந்திரவாதி வந்தான், முதல் நாள் போலவே பூஜை நடந்திருப்பதை பார்த்தவன், கோபம் அடைந்து சாமிகளிடம் சென்று நேற்றே நீ பூஜை செய்யக்கூடாது என கூறினேன் பின்பும் ஏன் பூஜை செய்தாய் என கேட்டான் அதற்க்கு சாமிகள் கோவில் திறந்து இருந்தது நான் பூஜை செய்தேன் நீ கோவிலை நன்றாக பூட்டிசெல் என அமைதியாக கூறினார். சுவாமிகளின் பதிலை கேட்ட மந்திரவாதி கோவிலுக்கு சென்று கதவை நன்றாக சாத்தி வலுவாக பூட்டி சரிபார்த்து சென்றான். மறுநாள் வந்தான் கோயில் திறந்து பூஜை செய்திருந்தது கண்டான் கடும் கோபம் கொண்டு சாமிகளிடம் சென்று நீ இந்த இடத்தை விட்டு சென்று விடு இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்தான், அதற்க்கு சாமிகள் நான் பூஜை செய்த முறைகள் தவறா? அல்லது திறந்திருந்த கோவிலில் பூஜை செய்தது தவறா ? இதில் எதுவும் தவறில்லை எனவே எனக்கு எந்த தீங்கும் நேராது என்றார், இதைக்கேட்ட மந்திரவாதி கோபமுற்று சாமிகளை பழி வாங்க வேண்டுமென தீர்மாணம் செய்து தனது குருவிடம் நடந்ததை கூறி, சுவாமிகள் மீது ஏவல் பூஜை செய்து அவரை கொல்லுமாறு பூதம் ஒன்றை ஏவினர், சாமிகள் தன்னை கொல்ல வந்த பூதத்தை பார்த்து ''சாந்தி'' என சொல்லவும், அந்த பூதம் சாமிகளின் காலடியில் அமைதியாக மண்டியிட்டு அமர்ந்தது விட்டது, சென்ற பூதம் திரும்பி வராததால் மந்திரவாதி மற்றுமொரு கொடுமையான பூதத்தை பழிவாங்க அனுப்பி வைத்தான் அந்த பூதமும் சாமிகள் ''சாந்தி'' என சொல்ல அமைதியாகிவிட்டது,
அனுப்பிய பூதங்கள் செயலற்று போனதால் மந்திரவாதி மிக கோபம் கொண்டு யாராலும் வெல்ல முடியாது என கருதப்படும் ''ருத்ரபூதத்தை '' அனுப்பி வைத்தான், ருத்ர பூதம் சாமிகளை கொல்ல விண்ணுக்கும் மண்ணுக்கும் தீப்பிழம்பாய் கொடுரமாக சென்று சாமிகளை நெருங்கியது சாமிகள் சாந்தி என்றார் ஆனாலும் பூதம் அடங்கவில்லை மேலும் தீவிரமாகியது அதைக்கண்ட சாமிகள் பதறினார் உடனே அன்னையை (மீனாட்சியம்மன் அதாவது பெரிய பிராட்டி )நினைத்து வணங்கினார் உடனே அவ்விடம் வந்த அன்னை மிகவும் பலம் வாய்ந்த அந்த பூதத்தை பார்த்து ''ஆற்றி இரு'' (அதாவது ''ஆத்தி இரு '' அல்லது ஆறுதலாக இரு) என கட்டளை இட்டார் பூதம் சற்று அமைதியானது, பூதத்தை பார்த்து அன்னை நீ வந்த காரணமென்ன ? என்று வினாவினார் அதற்க்கு ''ருத்ரபூதம்'' அருகில் இருந்த சுவாமிகளை காட்டி இவரை கொன்று வர எனக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது எனக்கூறி இவர் தங்களின் பக்தன் என எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் நான் வந்திருக்கவேமாட்டேன் எனக்கூறி மன்னிப்பு கோரியது. அன்னை கருணையுடன் பூதத்தை மன்னித்து நீ இங்கேயே கோவிலில் ''ஆத்தி இரு'' உனக்கு இரு வகை படையல் உண்டு என அருளினார், ருத்ரபூதமும் அன்னையை வணங்கி அப்படியே ஏற்றுக்கொண்டு, தான் இப்பொழுது எழும்பியதால் எப்படியும் நரபலி கொள்ளவேண்டும் அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்க, அன்னை உன்னை அனுப்பியவனையே பலி கொள்ளுமாறு சொல்ல தன்னை அனுப்பிய மந்திரவாதியை நரபலி கொண்டு அமைதியாகியது, பின்னர் அன்னையிடம் கொடுத்த வாக்கின் படி இங்கு வந்து அமர்ந்தது, அன்னையின் வாக்குபடி ஆத்தி கோயிலில் மற்ற பணிவிடைகளோடு ''மச்ச பணிவிடையும்'' ''கீரிச்சுட்டான்'' பணிவிடையும் சேர்த்து கொடுக்கப்பட்டு வருகிறது