திருமந்திரம்

                 கடவுளின் பல்வேறு அவதாரங்களுக்கும் பல்வேறு மந்திரங்கள் உள்ளன. சைவ வைணவ மந்திரங்கள் மட்டுமில்லாது. நல்லவற்றுக்கும் , தீயன செய்யவும் கூட மந்திரங்கள் உள்ளன, இது பண்டிதர்களுக்கும் அல்லது மாந்திரிகத்தை தொழிலாக கொண்டவர்களுக்கு சாத்தியமாகலாம் ஆனால், ஆதிமூலம் இறைவன் ஒருவனே  அவனை வணங்க ஒரே மந்திரம் போதுமானது  சாதாரண பக்தனையும் இறைவனிடம் கொண்டு செல்லும் மந்திரம் எட்டெழுத்து மந்திரம் என புகழப்படும் மந்திரம், அதுவும் மூல மந்திரம் ஓம்கார மந்திரம் எளிதான முறையில் கைக்கொள்ளும் மந்திரம்
                 "ஹரி ஓம் ராமானுஜாய"
இந்த மந்திரத்தை ஜாதி, மதம், வயது ,ஆண், பெண் பேதமில்லாமலும், பெண்கள் தாய்மை அடைந்த போதும் , மாதவிலக்கின் போதும் கூட கூறலாம் (மாதவிலக்கு என்பது இறைவனால் ஏற்ப்படுத்தப்பட்டது, அதுவும் இந்தக்காலத்தில்தான் பெண்கள் புனரமைக்கபடுகிறார்கள், மேலும் இது வொன்றும் கடவுளுக்கு எதிரான ஓன்று அல்ல)

                       இந்த திருமந்திரத்தை கைக்கொள்ளும் முறை
                       --------------------------------------------------------------
     எந்த கிழமை என்றாலும் எந்த திதி என்றாலும் நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவை இல்லை ஆனால், இறைவனை நோக்கி மனது செல்லும் நல்வேளையாக இருக்கவேண்டும் அப்பொழுது குளித்து விட்டு உலர்ந்த ஆடைகளை கட்டிக்கொண்டு கோவிலில் அல்லது வீட்டில் கூட இறைவனின் திரு உருவத்தின் முன் சிறிய செம்பு (கிளாஸ், தண்ணீர் அருந்தும் பாத்திரம்) ஒன்றில் நிறைய தண்ணீரை வைத்து(நிறைசெம்பு என்றும் கூறுவார்கள்)  விளக்கேற்றி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி  அமர்ந்து நமது குலதெய்வத்தை  நினைத்து,அவரிடம் தாங்கள் குருவாக இருந்து இந்த மந்திரம் எனக்கு பலிக்க செய்யுமாறு வேண்டிக்கொள்ளுங்கள்( மந்திரங்கள் குரு உபதேசம் இல்லாமல் செய்வது இல்லை, ஆனால் இன்றைய சூழலில் நல்ல குருவை தேடுவது சிரமம் அதிலும் குடும்பஸ்தர்களுக்கு நடக்காத காரியம் ஆகவே நமது குலதெய்வத்தை குருவாக ஏற்ப்பதுதான் சரி) பின்பு

                 "ஹரி ஓம் ராமானுஜாய"    

என்று நிதானமாக கடவுளை நினைத்து மனதுக்குள் சொல்ல ஆரம்பியுங்கள் முதல் முறையாக முறைப்படி சொல்லும் போது  சரியாக 108 முறை சொல்லி கடவுளை மீண்டும் வணங்கி நிறைசெம்பு தண்ணீரை குடித்து நிறைவு செய்யுங்கள் (அருகில் மற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கும் கொடுக்கலாம்) இப்பொழுது ஹரி ஓம் ராமானுஜாய மந்திரம் கைவசமாய் ஆகி பலன் தர தொடங்கிவிட்டது. தினசரி இறை திருஉருவின் முன்னோ அல்லது கோவிலிலோ அல்லது பயணத்தின் போதோ மந்திரம் சொல்ல சொல்ல உங்களுக்கு  காரியம் சித்தியாகும். இதனால் திருமண தடைகள் நீங்கும், நல்ல மணவாழ்க்கை அமையும் , தொழில் வளம் பெருகும்,முன்பு குறை சொன்ன வாடிக்கையாளர்கள் சந்தோசமுடன் வாங்கி செல்வார்கள், நல்ல வேலையாட்கள் அமைவார்கள் ,நவகிரகங்களின் பரிபூரண நன்மைகள் கிட்டும்,குழந்தை பாக்கியம் கிடைக்கும் ,படிப்பு நன்றாக வரும் ,தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்    ஆயுள் அதிகரிக்கும் ஆரோக்கியம் பெறுகும்.மனித வாழ்வில்  மகத்தான இறையருள் கிடைக்கும்

கருத்துகள் இல்லை: