அருள்மிகு ஆத்திசாமி பாதம்


உடல் நிலை, மனநிலை ,ஜாதகத்தில் கிரக நிலை சரியில்லாமல் இருந்தால் அவற்றை சரி செய்ய, ஆத்தி சன்னதி பூஜை நேரத்தில் கோழி முட்டை ஒன்று வாங்கி அண்ணாவியிடம் (பூசாரியிடம்) கொடுத்தால், அவர் அதை நம் தலையை சுற்றி தலைமீது வைத்து மந்திரங்கள் உச்சரித்து அந்த முட்டையை ஆத்திசாமி பாதத்தில் ஒப்படைத்து விடுவார். பின்பு நமது குறைகளை ஆத்திசாமி தீர்த்து விடுகிறார். இது நமது கோவிலில் காலம்காலமாக நடந்து வருகிறது, மக்கள் குறை நீங்கபெறுகிறார்கள்.
ஆத்தி சுவாமியின் தோற்றம் இடது கையில் கதையுடனும், வலது கரத்தில் வீச்சரிவாளுடனும் ( வீச்சு + அரிவாள் )

அருள்மிகு அனந்தம்மாள்


அருள்மிகு திருப்புளி ஆழ்வார்


பனையறுப்பு பொங்கல்

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி நடப்பு ஆண்டின் முதல் பனை அறுவடை தொடங்கப்படுகிறது, அன்று செட்டியாபத்து மக்கள் ஊர் கூடி முதலில் பனையறுவடை செய்த ஓலையை பெரியசாமி சன்னதியின் முன் வாழைமரம் கட்டுவதுபோல் கட்டி வணங்கி தங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவவேண்டிக் கொள்கிறார்கள். மேலும் அன்று கோவிலில் பொங்கல் வைத்த பின்பு பொங்கல் வைத்ததை ஊருக்கு அறிவிக்கிறார்கள் அதன் பின்புதான் ஊரில் எல்லோரும் பொங்கல் வைக்கிறர்கள். கோவிலில் பொங்கல் வைக்கும் முன்பு ஊரில் யாரும் பொங்கல் வைப்பதில்லை 

சாமான்கள் பாதுகாப்பு அறை


பக்தர்களின் வசதிக்காக புதியதாக சாமான்கள் பாதுகாப்பு அறை ஒன்று கோவில் அலுவலகத்தின் முன்பு தொடங்கப்பட்டுள்ளது.