கோயில் பெயர் காரணம்

திருக்கோவிலானது சுமார் நான்கு ஏக்கர் பரப்பில் சுற்றுசுவர்களுடன் அமைந்துள்ளது. கிழக்குபுறம் ஒரு வாசலும், மேற்குபுறம் ஒரு வாசலும், வடக்கு புறம்  ஒரு வாசலும் உள்ளன, வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் அருள்மிகு ஸ்ரீ பெரியசாமி சன்னதியும் ,அடுத்து ஸ்ரீவயனப்பெருமாள்  சன்னதியும், அதனை ஒட்டி ஸ்ரீ அனந்தம்மாள் சன்னதியும், அடுத்து ஸ்ரீ ஆத்தி சுவாமி சன்னதியும் , அதனை அடுத்து ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சன்னதியும் ,அதன் அருகில் ஸ்ரீ பெரியபிராட்டி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன, ஒரே கோட்டை சுவருக்குள் ஆறு தெய்வங்களும் ஐந்து சன்னதிக்குள் அமைந்துள்ளதால் இத் திருக்கோயில் ''ஐந்து வீட்டு சுவாமிகள்'' திருக்கோயில் என அழைக்கபடுகிறது

கருத்துகள் இல்லை: