பூஜை (POOJAI) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூஜை (POOJAI) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Poojai

  இக் கோவிலில் பூஜையின் போது மேளம், தாளம், நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் இசைப்பதில்லை,  மந்திரங்கள் ஓதுவதில்லை          மவுனமாக நடக்கிறது, ஆனால் ஆலயத்தின் மணி மட்டுமே ஒலிக்கிறது, திருவிழாவின் போது சாமி ஊர்வலம் இல்லை, இங்கு சக்தி வழிபாடு தொன்று தொட்டு நடக்கிறது, எனவே பெண்களுக்கு சிறப்பு உரிமை வழங்கப்படுகிறது, பூஜை பொருள்களை பெண்கள் தொட்டு வணங்கிய பிறகு தான் சுவாமிக்கு படைக்கபடுகிறது .

Sri Periyaswamy Pooja

  எல்லா தெய்வ சன்னதியிலும்   கடவுளுக்கு அடுத்த நிலையில் பூசாரிகளுக்கு மரியாதையை கொடுக்கபடுகிறது, பக்தர்கள் தெய்வ   திரு உருவை நெருங்க முடியாது, ஆனால் இங்கு கடவுளை தொட்டு வணங்கலாம்,  வணங்கும் போது பூசாரிகளும் (அண்ணாவி) பக்தர்களுடன் நின்று பூஜை செய்கிறார்கள்  இது கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை குறிக்கிறது,  இத் திருக் கோவிலின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே மிகவும் உன்னதமான இருந்து  உள்ளது , இந்தக்கோவில் தெய்வங்களை  நம் குல தெய்வமாக அடைய பெற்றதற்கு நாம் பெருமை கொள்ளுவோம்,
                                        ஹரி ஓம் ராமானுஜாய 
                                        ஹரி ஓம் ராமானுஜாய
                                        ஹரி ஓம் ராமானுஜாய...................