பங்குனி உத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்குனி உத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பங்குனி உத்திரம் திருவிழா

 


 அந்த காலத்தில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கொடுத்த பணிவிடை பிரசாதத்தை அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்ததாக கூறி மக்கள் ஒருவரும் வாங்க மறுத்துவிட்டனர் அவர் அந்த வருத்தத்தில் அழுது புலம்பி தெய்வத்திடம் முறையிட்டு அசந்து தூங்கிவிட்டார் அப்பொழுது அவர் கனவில் பெரியசாமி தோன்றி ஒரு இடத்தை காட்டி அங்கு பிரசாதத்தை வாழைஇலை போட்டு  மூடி புதைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டு அடுத்தவருடம் வந்து திறந்து பார் எனக்கூறி மறைந்தார், அவரும் அதன்படி செய்துவிட்டு சென்றார்.
     மறுவருடம் வந்து புதைத்து வைத்த பிரசாதத்தை எடுத்து பார்த்த துப்புரவு தொழிலாளியும் மற்றவர்களும் அப்பொழுதுதான் ஆக்கிய சாதம் போன்று ஆவிபறக்க புத்தம் புதியசாதமாக கண்டு ஆச்சரியமடைந்து, பக்திபரவசத்தில் மூழ்கினார்கள், அந்த பிரசாதத்தை வாங்கிக்கொள்ள மக்களனைவரும்  போட்டாபோட்டி போட்டுக்கொண்டு சாதி வேறுபாடு பார்க்காமல் வாங்கி சென்றார்கள். அந்த இடம் பெரியபிராட்டி சன்னதிக்கு தென்புறம் உள்ள  புளியமரம் அமைந்துள்ள இடமாகும், அன்றுமுதல் தீண்டமையை ஒழித்து ஆண்டவனின் முன் அனைவரும் சமம் என்பதை அருள் மிகு பெரியசாமி தன திருவிளையாடல் மூலம் உலகத்தவரை உணரச்செய்தார்.இதனால் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களை கோயிலுக்குள்  அனுமதிக்காத அந்த காலத்தில்  அனைவரும் கோயிலுக்குள் சென்று இறைவனது திருஉருவை தொட்டு வணங்கும் உரிமை அனைத்து சாதியினருக்கும் கிடைத்தது. அதை அந்த  நிகழ்வை நினைவூட்டும் வகையில், துப்புரவு தொழிலாளிகள் பல காலமாக வணங்கி வந்த ''ஆத்திமூட்டை'' (அதாவது ஸ்தலவிருட்சகமான ''ஆத்தி'' மரத்தின் அடிமரத்தை ) இபொழுதும், கோவிலில் நுழைந்து தெய்வ வழிபாடு செய்யும் உரிமை கிடைத்த பிறகும், ஆத்தி மரத்தின் அடியில் உள்ள நாகர்களுக்கு ''பங்குனி உத்திர'' தினத்தன்று எண்ணை அபிசேகம் செய்து புது பட்டு உடுத்தி, ஆத்திசாமிக்கு  பணிவிடை செய்து அவற்றை நாகருக்கு படைத்து பணிவிடை செய்துவருகிறார்கள் உடன்குடியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள்