108 முறை மந்திரம் சொல்ல எளியவழி

108  முறை மந்திரம் சரியாக சொல்ல பல முறைகள் உண்டு
1 . மல்லிகை பூ மொட்டுகளை 108 எண்ணி எடுத்துக்கொண்டு பூஜையின் போது ஒவ் வொன்றாக சுவாமிகளின் மேல் பணிவாக போட்டு மந்திரம் சொல்லலாம் ஒரு பூவை போட்டதும் ஒருமுறை மந்திரம் சொல்ல வேண்டும்
2 . 108  ருத்ராட்சம் உள்ள மாலையை கையில் வைத்துக்கொண்டு அடையாள ருத்ராட்சத்திலிருந்து ஒரு ருத்ராட்சத்தை நகர்த்தியதும் ஒருமுறை மந்திரம் சொல்லவேண்டும் பின்பு அடுத்த ருத்ராட்சத்தை நகர்த்தியதும் அடுத்த முறை மந்திரம் சொல்லவேண்டும் இப்படியே 108  முறை சொல்லலாம்

3 . இது மிகவும் எளிய வழி நாம் எங்கிருந்தாலும் மற்ற யாரும் நம்மை கவனிக்காமல் நம் மனதுக்கு மட்டும் தெரியும் படி நாம் மந்திரம் சொல்லி இறை அருள் பெறலாம் 108 முறையும் சரியாக சொல்லலாம்
   நமது கை விரல்கள் ஒவ்வோன்றிலும் மூன்று மடக்குகள் உள்ளன,எனவே இடது கையில், சுண்டு விரல் மோதிரவிரல் நடுவிரல் மூன்றையும் தேர்வு செய்து கொள்ளுங்கள், வலது கையில் சுண்டு விரல், மோதிரவிரல், நடுவிரல்,ஆள்காட்டி விரல் நான்கையும் தேர்வு செய்து கொள்ளுங்கள் இப்பொழுது இடது கை மூன்று விரல் மடக்குகள் மொத்தம் ஒன்பது,வலது கை விரல் மடக்குகள் பன்னிரெண்டு ஆக மொத்தம் நூற்றியெட்டு, முதலில் இடது கை சுண்டு விரல் நுனியில் உள்ள முதல் மடக்கில் இது கை பெருவிரல் கொண்டு தொட்டு அடையாளமிட்டு கொள்ளுங்கள்,பின்பு வலக்கை சுண்டுவிரல் நுனியில் வலது கை பெருவிரல் கொண்டு தொட்டு ஒருமுறை மந்திரம் சொல்லுங்கள் அதன் பிறகு வலக்கை சுண்டு விரலில் பெருவிரலை இரண்டாவது மடக்கில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லுங்கள் இப்படியாக நான்கு விரல்களிலும் பன்னிரெண்டு முறை சொல்லிவிட்டு இடது கை சுண்டு விரலில் பெருவிரலை இரண்டாவது மடக்கிற்கு நகர்த்தி அடையாளமிட்டுக்கொள்ளவும் பின்பு வலது கையில் முன்பு போலவே செய்யுங்கள்,இப்படி இடது கை விரல் ஒரு மடக்கிற்கு வலது கைவிரல் பனிரெண்டு மடக்குகள் வீதம் எண்ணுங்கள் 108 சரியாக வரும்
                                
                                       ஹரி ஓம் ராமானுஜாய