தை பொங்கல் அன்றும், சித்திரை 17ந்தேதி அன்றும், பெரியசாமிக்கு சாம்பார் சாதம் இந்த பனை ஓலை பட்டையில் ஒன்பது வைத்து பூஜையின் போது வணங்கி, பூஜைகள் முடிந்த பின்பு பழைய அண்ணாவிகளுக்கும் தர்மகர்த்தாவிற்க்கும் பிரசாதமாக வழங்கபடுகிறது...
ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
பிரசாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரசாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்ன பிரசாதம்
தை பொங்கல் அன்று பக்தர்களுக்கும், பழைய அண்ணாவிகளுக்கும், தர்மகர்த்தாவுக்கும் பிரசாதம் கொடுக்க சாம்பார், சாப்பாடு தயாராகும் காட்சி. தை பொங்கல் அன்று அன்ன பிரசாதம் சாப்பாடு தனியாகவும் சாம்பார் தனியாக பரிமாறாமல், சாம்பார் சாதமாக வழங்கபடுகிறது.
சர்க்கரை பொங்கல் பிரசாதம்
கோவிலில் சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு நாம் கோவிலில் பணம் கட்டிவிட்டால், அவர்களே பூஜைக்குரிய பொருட்கள், பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அனைத்தையும் வாங்கி பொங்கல் செய்து, நாம் விரும்புகிற பூஜை நேரத்தின் போது நம்மை பூஜையில் கலந்து கொள்ள செய்து தேங்காய், பழம், பூ என அனைத்தையும் அனைத்து கருவறைகளிலும் சாமிக்கு படைத்து, அதன் பின் ஓலை கூடையில் நமக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமும் சாமிக்கு அணிவித்த மாலைகளும் தேங்காய் பழம் அனைத்தும் ஒரு பையில் பிரசாதமாக நம் மனம்மகிழ வழங்குகிறார்கள்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)