கேள்வி:
நமது கோவில் வழிபாட்டு முறையில் பூஜை பெட்டி வைத்து வணங்கும் பழக்கம் உள்ளதா?
பதில்:
நமது கோவில் வழக்கத்தில் இல்லை. பெட்டியில் சாமி வைத்து வணங்கும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா?
அந்தக் காலத்தில் வசதி படைத்த மன்னர்கள் கோவில் கட்டி கொண்டார்கள். அரண்மனைக்குள்ளும் கோவில் வைத்துக் கொள்வார்கள்.
ஊர்க்காரர்கள், பணக்காரர்கள் சேர்ந்து ஊருக்கு பொதுவான இடத்தில் கோவில் கட்டுவார்கள். இந்த கோவில்கள் பிடிமன் கோவிலாகவோ அல்லது சிலை வைத்து வணங்கும் கோவிலாக இருக்கும்,
போக்குவரத்து குறைவான காலத்தில் வசதி குறைவானவர்கள் குலதெய்வ கோவில்களுக்கு எப்பவாவது ஒரு முறை சென்று வருபவர்கள் கோவிலில் உள்ள சாமியின் மீது அணிவிக்கப்பட்ட ஆடை அல்லது அங்கு வைத்து பூஜை செய்யப்பட்ட பொருள் ஒன்று கொண்டு வந்து ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைத்து அவர்களது தெய்வத்தை வணங்கி வருவார்கள்.
பெட்டிகள் வைத்து வணங்குவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது, அவர்கள் வணங்கி வரும் பொருட்கள் அதாவது சாமியின் அடையாளங்கள் பாதுகாப்பாகவும் இருக்கும், மேலும் தீட்டு படாமலும் இருக்கும்,
அந்த காலத்தில் பலரும் சிறிய வீடுகளில் இருந்ததால், அவர்களின் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் மாதவிடாய் காலம் போன்ற நேரங்களிலும், இறந்தவர்கள் வீட்டு சென்று வந்த போதும் தீட்டுப்படும் என்ற நம்பிக்கையும் இருந்ததால் அந்த தெய்வங்களுக்கு தனி பூஜை அறை வசதி வீடுகளில் இல்லாததால் பெட்டிகள் வைத்து தனிமைப்படுத்தி வைத்தார்கள், இப்படியாகத்தான் பூஜை பெட்டி வைத்து வணங்கும் பழக்கம் பல நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது புதிதாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு செய்து கொண்டிருந்தால் தொடர்ந்து செய்யலாம் தவறு ஏதும் இல்லை.






