திருமணி மாலை பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணி மாலை பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமணி மாலை பாடல்- 29 To 32

திருமணி மாலை பாடல்- 24To 28

திருமணி மாலை பாடல்- 19To 23

திருமணி மாலை பாடல்- 14 To 18

திருமணி மாலை பாடல் 9To 13

திருமணி மாலை பாடல் 5 To 8

திருமணி மாலை பாடல் 4

                                                    -திருமணி மாலை பாடல்-4

ஏது துயரம் வந்தாலும் எளியோர் வலியோ ரானாலும்
வாது சூது செய்தாலும் வறுமை கொடுமையானாலும்
போது மனவே எட்டெழுத்தை போற்றித்துதித்த போதுனக்கு
தீது வினைகள் தானகற்றும் சிவமாய் உதித்த திருமணியே...

திருமணி மாலை பாடல்- 3

                                                 -திருமணி மாலை பாடல்-3

குட்டம் குறை நோய் வாதபித்தம் சூன்மம் சயநோய் நீராம்பல்
வெட்ட கரப்பன் வெடி சூலை மேக பாண்டு பீனிசமும்
மட்டிலடங்கா நோய் தனக்கு மருந்தே திருமணி அறிந்திடவே
திட்டமுடனே நோய்தீர்க்கும் சிவமாய் உதித்த திருமணியே...

திருமணி மாலை பாடல் 2

                                                         - திருமணி மாலை பாடல்- 2

பழிகள் கொலைகள் செய்தாலும் பாவம் அநேகம் நினைத்தாலும்
விழிகண் குருடு கால்கைகள் முடக்கம் இருந்தால் மனமுருகி
அழியாதிருக்கும்  எட்டெழுத்தை அன்பாய் துதிக்க வினைதீர்த்து
தெளிவாய் மனதில் அருள்புரியும் சிவமாய் உதித்த திருமணியே...

திருமணி மாலை பாடல்-1

                                                     -திருமணி மாலை பாடல்- 1

ஈரேழ் உலகம் பதினாலும் எறும்பு முதலாய் எவ்வுயிர்க்கும்
பாரோர் பணியும் சிவன்மாலும் படைக்கும் பிரம்மதேவருக்கும்
ஆராய்ந்திருக்கும் தபோதனர்க்கும் அஷ்ட வசுக்கள் முனிவருக்கும்
சீராய் இறங்கி அருள்புரியும் சிவமாய் உதித்த திருமணியே...

திருமணி மாலை பாடல் காப்பு

                                                     
இந்த திருமணி மாலை பாடல்களை "எப்போதும்வென்றான்" என்னும் திருத்தலத்தில் தெய்வமாய் குடியிருந்து அருள் பாலிக்கும் தெய்வத்திரு சோலையப்பசுவாமிகள் இயற்றி அருளியது.
                                                                  -காப்பு-

கருமணி உண்டு சொற்காயாம்பு மேனிக் கருணை உண்டு
ஒருமணி உண்டு என் உள்ளத்திலே உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவிகோடி சூரியப்ரகாச குரவி உண்டு
திருமணி உண்டு  ஹரி ஓம்நமோ ராமானுஜாய என்ற தெய்வமுண்டே...