யாத்திரை

உறவுகளே!!!
எனக்கு பல காலமாக ஒரு யோசனை உண்டு. நமது குலதெய்வம் பெரிய சுவாமிகள் பல ஊர்களுக்கு சென்று பல இடங்களில் தங்கி பூஜைகள் செய்து சீடர்களுடன் அந்த ஊர் மக்களுக்கும் சூட்சும பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார். அப்போது அங்கு வந்தவர்களுக்கு அசைவ விருந்து படைத்திருக்கிறார், அதை நினைவூட்டு விதமாக பெரிய சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றில் பங்குபெறும் இடங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து சுமார் ஒரு 40, 50 கிலோ மீட்டர்கள் ஆண்டு தோறும் ஏதேனும் ஒரு நாளில் பாதயாத்திரை துவங்கி நமது செட்டியாபத்து கோவிலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் ஏதேனும் செய்து சிறப்பித்தால் நமது கோவில் மிகவும் பிரபலமாகும் நமது குருவின் நோக்கமும் மக்களை சென்றடையும் யாத்திரையின் போது தங்குமிடங்களில் மற்ற கோவில்களுக்கு மாலை அணிந்து செல்வது போல் செல்ல வேண்டியது இல்லை. சைவ உணவுகள் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை நாமும் சில இடங்களில் பெரியசாமிகள் செய்தது போல் அசைவ உணவுகளை படைத்து யாத்திரை சென்றால், பாதயாத்திரை என்றாலே சைவ உணவு தான் சாப்பிட வேண்டும் விரதம் தான் இருக்க வேண்டும் என்பதை முறியடித்து, நமது குரு குலதெய்வம் செய்து காட்டியது போல் எந்த வகை உணவும் கடவுளை அடைய எந்தவித தடையும் செய்வதில்லை, எந்த வகை உணவு சாப்பிடுபவர்களாலும் கடவுளை அடைய முடியும் என்பதை உலகுக்கு மீண்டும் செய்து காட்டிவிட முடியும், என்று நான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன் இதை செய்யும் வாய்ப்புகள் ஏதேனும் இருக்குமா என்று சொல்லுங்கள்...
அன்புடன் ஆத்தியப்பன்  S

நவராத்திரி

நவராத்திரி

நமது திருக்கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை பூஜை 09.10.2026 அன்று இரவு 10.00 மணிக்கு மேல் தொடங்கி நடைபெறும் மற்றும் நவராத்திரி காப்பு கட்டுதல் பூஜை 10.10.2026 அன்று காலை 08.30 மணிக்கும் நவராத்திரி பூஜை அன்று இரவு 09.00 மணிக்கும் தொடங்கி நடைபெறும். மேற்படி நவராத்திரி தினங்களில் பணிவிடை பூஜை இரவு நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். மேற்படி 10.10.2026 முதல் 19.10.2026 முடிய நடைபெறும் நவராத்திரி பூஜை இரவு 09.00 மணிக்கு தொடங்கி நடைபெறும். மேற்படி தினங்களில் பணிவிடை செய்ய விரும்பும் அன்பர்களுக்கு மாலை 03.30 மணிக்கு பாதப்பால் வழங்கப்படும்.