கருணை

உன் கவலைதான் என்ன? என்னிடம் கூறிவிடு நானே உனது குரு; என்னையே நினை; என் நாமத்தையே நினை, என்னை வணங்கி என்னிடம்  சரணடை அது போதும் உனக்கு.
நீ எதற்கும் பயப்படாதே. நீ ஏன் கவலைபடுகிறாய்? என்னை நீ தஞ்சமடைந்து விட்டாயல்லவா! நான் பார்த்து கொள்கிறேன்.இனி எதற்கும் நீ பயப்பட தேவைஇல்லை. உனது மனம், புத்தி, அகங்காரம் எனும் மூன்றையும் என்னிடம் சமர்ப்பித்துவிடு. இவ்வுலக வாழ்க்கையில் உன் கையில் ஏதுமில்லை. 
எல்லாவற்றையும் நானே இயக்குகிறேன் என்ற மனோபாவத்தை ஏற்படுத்திகொள் . எதிலும் அவசரபடாதே பொறுமையாய் இரு. என் மீது உன் பாரத்தை இறக்கு, நான் சுமக்கிறேன. என் மீது முழு நம்பிக்கை வைத்து நீ செய்யும் அனைத்து செயல்களுக்கும் என்னை பொறுப்பாளியாக்கு உன் செயலை உன் விருப்பபடி நான் செய்து முடிக்கிறேன்.
நம்பிக்கை எனும் அச்சாணியாக என்னை உன் மனதில் நிறுத்து. 
பொறுமையாய் வாழ்ந்து வா .
உன்னை சேர்ப்பிக்க வேண்டிய இடத்தில் நான் சேர்க்கிறேன்.என்னை சரணடைந்து உன்னை என்னிடம் ஒப்படைத்துவிட்டு என் மீது முழு நம்பிக்கை வை உன் பாரம் மட்டும் அல்ல உன் பாவத்தையும் நான் சுமக்க தயாராக இருக்கிறேன். 
*என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வை…*

ஆத்திசாமி யார்?

                                             ஆத்திசாமி யார்?
      ஆத்திசாமியை பூதம் என்கிறார்களே சரியா?
ஆதியிலே இருந்த கோயில் அதுதான் என்றும் சொல்கிறார்களே!!! பெரியசாமிகளும் இந்த கோவிலை தான் வணங்கினார் என்றும் சொல்கிறார்களே உண்மையா? அப்படியானால், பெரியசாமிகள் பூதத்தை வணங்கினாரா!!! ஆனால், பெரியசாமிகளை கொல்வதற்கு மந்திரவாதி ஏவிய பூதம்தான் ஆத்திசாமி என்கிறார்களே!!! ஒரே குழப்பமாக உள்ளது. என்று, நமது கோவில் வரலாறு பற்றி சிந்தித்து குழப்பமாக இருக்கிறதா? அப்படியானால் நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அந்த
உண்மை என்னவென்றால் இந்து ஆன்மீக வரலாற்றில் சித்தர்களை அடக்கம் செய்த இடத்தில்தான் நாற்காலி வைத்திருப்பார்கள்.அதில் சித்தர் அமர்ந்து நமக்கு அருள் புரிவதாக கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. நமது கோவிலிலும் ஆத்திசாமி சன்னதியை நன்றாக கவனித்தீர்கள் என்றால் புரியும் ஆத்திசாமி நாற்காலியில் அமர்ந்து நமக்கு அருள் தருவதாக தான் வணங்கி வருகிறோம். பெரியசுவாமிகள் செட்டியாபத்துக்கு வரும் போது தற்போது உள்ள இடத்தில் இருந்த கோவிலும் ஆத்திசாமி கோவில்தான். அது அப்போதே சித்தர் கோவிலாக இருந்திருக்கும், அதனால்தான் பெரியசுவாமிகள் அதை வணங்கி வந்திருப்பார் ஆத்திசாமி பூதமாக அவரைக் கொல்வதற்கு வரும் போது அந்த இடத்தில் ஆத்திசாமியையும் நிலை நிறுத்தி இருப்பார். எனவே, அந்த இடத்தில் ஆத்திசாமிகளையும் அதற்கு முன்பு இருந்த சித்தரையும் ஒரு  சேரவே நாம் வணங்கி வருவதாக நான் கருதுகிறேன். இது பற்றி தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.