அது என்னமோ தெரியலை... கோவிலுக்கு போனா... இந்த மனசு நம்மை தவிர கோவிலில் வேறுயாரும் இருக்க கூடாதுன்னே... நெனைக்குது...
ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
மேக்கட்டி
திருவிழாவின் போது மேக்கட்டி பூஜை நடைபெறும் அப்போது படத்தில் வட்டமாக குறியீடு செய்த இடத்தில் புது துணியை கட்டுவார்கள். மற்ற கோவில்களில் கொடியேற்றுவது போன்ற நிகழ்வு.
சோலையப்பர்
#சோலையப்பர்சுவாமி
செட்டியாபத்து ஐந்து வீட்டு கோவில் பெரியசுவாமிகளின் சீடர். குருவின் கட்டளையை ஏற்று செட்டியாபத்தில் இருந்து வடக்கு நோக்கி புறப்பட்டு செல்லும் போது...
எப்போதும்வென்றான் என்கிற கிராமத்தை சென்றடைகிறார். குருவின் வாக்கை மெய்பிக்கும் வகையில் நிலம் பெரும் வெடிப்பாக இருந்ததால் இந்த ஊரிலே தவம் இருக்கிறார்.
திருமணிமாலை என்னும் அற்புதமான பாடல்களை எழுதி இருக்கிறார்.
நம் கலாச்சாரத்தில் இவரை போன்ற பல சித்தர்களை பற்றிய தகவல்கள் சரியாக பதியப்படவில்லை.
இன்றைக்கும் பல குடும்பங்கள் தங்களின் குல தெய்வமாக வழிபடுகிறார்கள்.
சித்தர் சமாதி ஸ்தலத்தில் சைவம் அசைவம் என படையல் படைக்கபடுவதை வேறு எங்கும் காணமுடியாது. ஆச்சரியமாகவும் இருக்கிறது.
அன்றைய சமூக கட்டுபாடுகளை தகர்த்து. எல்லோரும் சமமாக பாவித்து தாழ்த்தபட்ட மக்கள் வழிபட செய்துள்ளார்.
எல்லோருக்கும் சமபந்தி விருந்து, பெண்கள் வழிபட கட்டுபாடுகள் ஏதுமில்லாமல் மக்களுக்கு தன் அருளை ஆசியாக வழங்கிய சோலைசாமி என்கிற சோலையப்பர் சமாதிக்கொண்டுள்ள இந்த இடம் நூற்றாண்டுகளையும் கடந்து இன்றைக்கும் தன் அதிர்வுகளை வெளிபடுத்தி கொண்டு இருக்கிறது.
மணியோசை
பொதுவாக கோவில்களில் நாதஸ்வரம் மேளம் வாசிப்பார்கள் ஆனால் நமது கோவிலில் மட்டும் ஏன்? இப்படி மேளதாளம் இல்லாமல் பூஜைகள் நடைபெறுகிறது. விளக்கம் சொல்லுங்கள் சொந்தங்களே...!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)