குலதெய்வம்


குலதெய்வம் என்பது எங்கோ உள்ள ஒரு தெய்வத்தையோ அல்லது ஏதோவொரு சக்தியையோ வணங்குவது இல்லை.
நம்முடைய மூதாதையர்களில் ஒருவர், தன்னுடைய சந்ததிகளுக்கு தன்னை தியாகம் செய்தவராகவோ அல்லது இறைநிலை அடைந்தவர் ஆகவோ இருப்பர்.அவரை, அவருடைய தலைமுறையினர் வணங்கி வருகிறார்கள்.அந்த தலைமுறையினர் வணங்கி வந்தாலும் வணங்காமல் இருந்தாலும் குலதெய்வம் அவர்களை எப்போதும் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்.ஒரு தந்தை தன் குழந்தையை விளையாட விட்டு பார்த்துக் கொண்டு இருப்பது போல்.
குலதெய்வத்தை வணங்க மந்திரங்களோ மற்றும் தந்திரமோ தேவையில்லை.
குலதெய்வத்தின் மேல் ஒரு அன்பான மனோநிலையே.
குலதெய்வத்தை தன்னுடைய தந்தை, தாயைப் போல் நேசிக்க வேண்டும்.

குலதெய்வம் சில நேரங்களில் நமக்கு துன்பத்தையும் தரலாம். அப்போதும் நேசிக்க வேண்டும்.
குலதெய்வம் நமக்கு இன்பத்தை தரும் போது மறக்காமல் நன்றி சொல்ல வேண்டும்.துன்பம் வரும் போது அவனிடம் கோபித்துக் கொள்ளலாம்.
கோபித்துக் கொண்டாலும் அவனை மறக்க கூடாது.
மற்ற கோவில்களுக்கு செல்லும் போது இருப்பதையும், தன்னுடைய குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது உள்ள மனோநிலை பாருங்கள்.அது தன்னுடைய தகப்பன் வீட்டிற்கு சென்ற ஒரு திருப்தியான மனோநிலை இருக்கும்.
நல்ல வாழ்க்கை அமைந்தால் குலதெய்வத்தை வாழ்த்துங்கள்.
துன்பமான வாழ்க்கை அமைந்தால் மனதில் உரிமையோடு, அன்போடு திட்டுகள் இறைவன் உடனே உங்களுக்கு கனவின் வழியாகிலும் பதில் சொல்லுவான் .