சேர்மன் அருணாச்ச சுவாமி Sri Arunachala Swami

-:செட்டியாபத்து கோவிலும், எரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகளும்:-



திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் மேலப்புதுக்குடியை சேர்ந்த ராமசாமி நாடார் , சிவனைந்த அம்மாள் தம்பதியர் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என வருந்தி ஆத்திசுவாமி கோவிலில் விரதம் இருந்தனர். .   விரதமிருந்த தம்பதியரிடம் திருமணியும், தீர்த்தமும் கொடுத்து விரைவில் உங்களுக்கு ஆண்மகன் பிறப்பான், அவனுக்கு அருணாசலம் என பெயர் சூட்டுமாறும், அந்த குழந்தையின் வாழ்வு பற்றியும் அருளினார் ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் இருந்த தவத்திரு வேலாண்டிசுவாமிகள், அதன் பயனாய் பிறந்த குழந்தைதான் ஆடி அமாவாசை அன்று எரலில் சிறப்பாக கொண்டாடப்படும்  ஏரல் சேர்மன் அருணாச்சல  சுவாமிகள்,  அதன் நினைவாக,  ஸ்ரீ சேர்மன் அருணாச்சல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடார் கட்டிகொடுத்ததுதான், ஆத்திசுவாமி கோவிலில் இப்பொழுது உள்ள பள்ளியறை  கட்டில்  மண்டபம். இங்கு பணிவிடை செய்பவர்களால் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் சந்நியசிகளில் ஒருவர்தான் வேலாண்டி சுவாமிகள் ,அவர் சமாதியான இடம்தான் கோவில் கோட்டை சுவருக்கு வெளியில்  கிழக்கு புறம் உள்ள வேலாண்டி சுவாமிகள் மடம்.



1 கருத்து:

Karu Ramesh Kumar @ Athiappan சொன்னது…

My late grandfather was named Chairman Nadar after the Lord Eral Arunchalam.