திருமணி மண் கிடைக்கும் வரலாறு

ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருமணி பொட்டு, வேறு எந்த கோவிலிலும் கிடைக்காத, செட்டியாபத்து கோவிலில் மட்டுமே கிடைக்கக்கூடிய உன்னதமான பொட்டு... இது செட்டியாபத்து  அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தனியார் ஒருவரின் நிலத்திலிருந்து கிடைக்கிறது. அவர் நமது கோவிலுக்கு திருமணிக்கு மண் எடுப்பதற்காகவே அந்த நிலத்தை ஒதுக்கி வைத்துள்ளார். அவர் வேறு எவரும் திருமண் எடுக்க அனுமதிப்பதில்லை. அவரும், அவரது குடும்பத்தினரும் நமது கோவிலுக்கு திருமண் கொடுப்பதை கடமையாகவே காலம் காலமாக செய்து வருகிறார்கள்  மேலும் அவர் நமது தெய்வத்தை வணங்குபவர் இல்லை. அவர் ஒரு கிறிஸ்துவ உறவு. இருப்பினும் அவருக்கு நமது குல தெய்வத்தின் மீது  பக்தியும் மரியாதையும் உண்டு. எனவே அவருக்கு நமது கோவில் பூஜை கூட்டத்தின் போது அவரை அழைத்து அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என நமது கோவில் நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளேன்( நமது கோவிலுக்குள் எவருக்கும் தனி மரியாதை செய்வதில்லை, எனவே கோவிலுக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் வைத்து மரியாதை செய்வார்கள்) எனவே அவருக்கு  நமது குழுவில் உள்ள அனைவரும் கமெண்ட்டில் வாழ்த்துக்களை சொல்லுவோம். அதை அவர் காணும் படியும் செய்வோம்...

கருத்துகள் இல்லை: