அருள்மிகு பெரியசாமி


பெரியசுவாமி ஜன்னல்

 இனி நம்ம வீடுகளிலும் இதை யோசிக்கலாம் ஜன்னலுமாச்சு , சாமியுமாச்சு

அடுப்பு

   கோவிலில் சமையல் செய்யும் அடுப்புகள் பழைய மாடலும் நவீன மாடலும்

கட்டண விபரம்


பூஜை காலம்


அடையாளம்

நமது கோவிலை குறிக்கும் இலகுவான அடையாளம் (Logo ) இந்த அமைப்பு சாவிதுவாரம் போன்று அமைக்கபட்டுள்ளது, இதன் பொருள் இவ்வுலக வாழ்க்கைக்கும் , அவ்வுலக வாழ்க்கைக்கும பக்தி என்னும் சாவி கொண்டு இறைவனின் அருளை அடைய வழிகிடைக்கும் திறவுங்கள் பக்தி கதவை

அருள்மிகு ஆத்திசாமி கோவில்



பதநீர் கஞ்சி பூஜை

 ஒவ்வொரு வருடமும் சித்திரை 17 ந் தேதி கஞ்சி பூஜை நடைபெறுகிறது, இந்த கஞ்சி பதநீர் கலந்து தயாரிக்கப்படும் கஞ்சி சோறு ஆகும், கஞ்சி பூஜை முடிந்தவுடன் ''பதநிகஞ்சி'' எல்லோருக்கும் வழங்கப்படும். ஐந்து வீட்டு சாமிகளின் அருள் கலந்து கிடைக்கும் பதநி கஞ்சியின மணமும் சுவையும் அபாரம்.  

பொதுவான பூஜை நடைமுறைகள்

         ஒவ்வொரு தமிழ் மாத ( மாதாந்திர ) கடைசி வெள்ளிகிழமைகளில்  நாள் முழுவதும் பணிவிடைகள் அனுமதியில்லை,
        பாதப்பால்  பெறாமல் கோயில் காம்பவுண்ட்டுக்குள் நடையன், மச்சம், கீறி, ஆத்தி பலியிடுதல் சமைத்தல் கூடாது, இது எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது.
       தமிழ் வருடபிறப்பு சித்திரை 1 ந் தேதி மற்றும் சித்திரை  16, 17, 18 கார்த்திகை தீப திருநாள், தை 1, 5, பங்குனி 21, மாசி மாதம் சிவராத்திரி ஆகிய நாட்களில் நாள் முழுவதும் பணிவிடைகள் செய்ய அனுமதி கிடையாது.
       அமாவாசை, பெளர்ணமி, புரட்டாசி மாதம் நவராத்திரி, சித்திரை 23, 24 மற்றும் தை 8 ந் தேதி ஆகிய நாட்களில் இரவு நேரங்களில் மட்டும் பணிவிடைகள் அனுமதிக்கப்படும்.     

திருவிழாக்கால நடவடிக்கைகள்

                                                                   
  சித்திரை திருவிழா காலத்தில் ஒவ்வொரு வருடமும் சித்திரை 16, 17, 18 ந் தேதிகளில் பணிவிடைகள் செய்ய அனுமதியில்லை.
   சித்திரை 18 ந் தேதி மேக்கட்டி பூஜை அன்று மட்டும் பணிவிடையுடன் காது குத்தும், முடிகாணிக்கையும் அனுமதிக்கப்படாது.
    சித்திரை 23 ந் தேதி அன்னமுத்திரி பூஜை அன்று பணிவிடைகள் மாலை 5.00 மணிக்கு மேல் தான் அனுமதிக்கப்படும். 

அழைப்பிதழ்- 2015


ஆத்தியப்பசாமியின் அபூர்வதரிசனம்



பள்ளியறை காணிக்கை

அருள்மிகு பெரியசாமிகளின் பள்ளியறை கட்டில். திருமணதடை  விலகவும், இல்லறவாழ்க்கை சிறக்கவும் வேண்டிக்கொண்டு எண்ணம் நிறைவேறிய பின் பக்தர்கள் பள்ளியறை கட்டிலுக்கு போர்வை அல்லது ஜமுக்காளம் தலையனையை காணிக்கையாக செலுத்துகின்றனர்

மண்டபம்




தற்பொழுது புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்த பட்ட மண்டபம்