சோலையப்ப சுவாமி சமாதி


             -:அருள்மிகு சோலையப்ப சுவாமி சமாதியின் தோற்றம்:-                                    செட்டியாபத்து  ஐந்துவீட்டு சுவாமி  கோயிலில் உள்ளது போன்றே, 'எப்போதும் வென்றான்''  ஊரில் உள்ள அருள் மிகு பெரியசாமியின் சீடரான 'சோலையப்பசாமி'களின் சமாதி ஆலயத்தில் திருமணி இடுவது மற்றும் பூஜை முறைகள் யாவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர்
 திருவிளக்கு


 கருவறை வாசல்
 சன்னதி நுழைவு வாசல் 


 கருவறையின் முன்புறமுள்ள மண்டபம்








 சோலையப்ப சுவாமிகள் திருக்கோயில் நுழைவு வாசல்
பின்புற வாசல்

அருள்மிகு அனுமன்

      ராமா ! ராமா !! ராமா !!! என்றவுடன் முதலில் உதவிக்கு வருபவன் அனுமன்,
                                    ஜெய் ஆஞ்சநேயா !!!

திருப்புளிஆழ்வார்

    ஆழ்வார் திருநகரியில் உள்ள  திருப்புளி ஆழ்வார் சன்னதியை பார்வையிட இணைப்பை கிளிக் செய்யவும்  http://rightplus.

Sri Vayanapprumaal

              இக் கோயிலில் வயணப்பெருமாள்,  பக்தர்களின் பாவ  புண்ணிய கணக்குகளை கணக்கிடும் கணக்குபிள்ளையாக செயல்படுகிறார். நேர்த்திகடன் செலுத்த தவறி பாக்கி இருந்தாலும் வசூலித்து விடுவார், அதுபோல் நியாயமான வேண்டுகோள் வைப்பவர்களுக்கு காரியம் உடனடியாக நடைபெறவும் செய்திடுவார். இவரின் கணக்கிலிருந்து யாரும் தப்பிவிட இயலாது என்கிறார்கள் அனுபவசாலிகள். அதனால் இவரை பக்தர்கள் கணக்குபிள்ளை என்றும் அழைக்கிறார்கள்.  

Sri Periyapratti Chetiyapathu,


அருள்மிகு பெரியசாமி சன்னதி கிழக்குவாசல்



அருள்மிகு அனந்தம்மாள்


கோவில் வடக்கு வாசல்


             வடக்கு கோபுரமும் அதன் உள்புறம் புதிதாக கட்டப்பட்டுவரும் பிரமாண்ட உள்மண்டபம்

அருள்மிகு ஆத்திசாமி



அருள்மிகு பெரியபிராட்டி

     கோயிலில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தும் பெரியபிராட்டியிடம் உத்தரவு கேட்டு, உத்தரவு கிடைத்தால் மட்டுமே நடைமுறைபடுத்தபடுகிறது

அருள்மிகு திருப்புளி ஆழ்வார் கருவறை


நேர்த்திகடன் பொருட்கள்




திருப்புளி ஆழ்வாருக்கு பக்தர்கள் செலுத்தும் நேர்த்திப்பொருட்கள்

அருள்மிகு பெரியசாமி


 

அருள்மிகு பெரியசாமி

   அருள்மிகு பெரியசாமியின் கருணை தோற்றம் கிருஷ்ணா !! ராமா !! கோவிந்தா !! நின் பாதம் சரணமடைந்தோம்.'' ஹரி ஓம் ராமானுஜாய ''

அருள்மிகு வயனப்பெருமாள்

           அருள்மிகு வயணப்பெருமாள் செல்லமாக ராவுத்தர் என்று இஸ்லாமியர்கள் பெயராலும்  அழைக்கப்படுகிறார் 

அருள்மிகு அனந்தம்மாள்


                      தாயாரின் மந்திர புன்னகை பார்க்க பார்க்க பரவசமூட்டும் ஜீவமுகம் உயிரோடும் கண்கள் எத்தனை தடவை பார்த்தாலும், எவ்வளவு நேரம் பார்த்தாலும் நமது  கண்களை  அகற்ற  இயலாத  தாயாரின்  வசீகரமுகம்  இதனைகான இந்தொரு ஜன்மம் போதுமோ ???  மறுஜன்மம் ஓன்று  இருக்குமேயானால் அப்பொழுதும் உன்னை கண்டு வணங்கும் அருகதையை எனக்கு அருள்வாய் அம்மா...

பெரியசாமி சன்னதி நிலை வாசல்

             
 பெரியசாமி சன்னதி தெற்கு திசை  நிலை வாசல்



குதிரைசுவாமி மண்டபம்



பூஜைகால அட்டவணை

    மார்கழி மாதம் மட்டும் காலசந்தி பூஜை காலை ஆறு மணிக்கு முன்பே முடிந்துவிடுகிறது, அதன் பிறகு உச்சிகால பூஜைக்கு காலை பதினோரு மணிக்குதான் நடை திறக்கப்படுகிறது 

கோயில் மண்டபம்

                                  புதுபிக்கப்பட்ட பரவசமூட்டும் பக்தி மண்டபங்கள். கோவிலில் நன்கொடையாக பக்தர்கள் தங்க மண்டபம் கட்டி கொடுத்தவர்களுக்கு  பெரியசாமியின் பரிபூரண அருள் கிடைக்கட்டும்.

ஆத்திசாமி சன்னதி

            ஆத்திசாமி சன்னதி கதவுகளில் தெய்வீக கலையம்சம்

ஆத்திசாமி சன்னதி,

                                                   ஹரி ஓம் ராமானுஜாய

பெரியசுவாமி

         பெரியசாமி சன்னதியில் தற்ப்பொழுது உள்ள விக்ரகத்திற்க்கு முன்பு இருந்த விக்ரகத்தை சன்னதியின் வடகிழக்கு மூலையில் வைத்து அதன் மேல் பீடம் அமைத்து வணங்கப்பட்டுவருகிறது

தூண்

பங்குனி உத்திரம் திருவிழா

 


 அந்த காலத்தில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கொடுத்த பணிவிடை பிரசாதத்தை அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்ததாக கூறி மக்கள் ஒருவரும் வாங்க மறுத்துவிட்டனர் அவர் அந்த வருத்தத்தில் அழுது புலம்பி தெய்வத்திடம் முறையிட்டு அசந்து தூங்கிவிட்டார் அப்பொழுது அவர் கனவில் பெரியசாமி தோன்றி ஒரு இடத்தை காட்டி அங்கு பிரசாதத்தை வாழைஇலை போட்டு  மூடி புதைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டு அடுத்தவருடம் வந்து திறந்து பார் எனக்கூறி மறைந்தார், அவரும் அதன்படி செய்துவிட்டு சென்றார்.
     மறுவருடம் வந்து புதைத்து வைத்த பிரசாதத்தை எடுத்து பார்த்த துப்புரவு தொழிலாளியும் மற்றவர்களும் அப்பொழுதுதான் ஆக்கிய சாதம் போன்று ஆவிபறக்க புத்தம் புதியசாதமாக கண்டு ஆச்சரியமடைந்து, பக்திபரவசத்தில் மூழ்கினார்கள், அந்த பிரசாதத்தை வாங்கிக்கொள்ள மக்களனைவரும்  போட்டாபோட்டி போட்டுக்கொண்டு சாதி வேறுபாடு பார்க்காமல் வாங்கி சென்றார்கள். அந்த இடம் பெரியபிராட்டி சன்னதிக்கு தென்புறம் உள்ள  புளியமரம் அமைந்துள்ள இடமாகும், அன்றுமுதல் தீண்டமையை ஒழித்து ஆண்டவனின் முன் அனைவரும் சமம் என்பதை அருள் மிகு பெரியசாமி தன திருவிளையாடல் மூலம் உலகத்தவரை உணரச்செய்தார்.இதனால் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களை கோயிலுக்குள்  அனுமதிக்காத அந்த காலத்தில்  அனைவரும் கோயிலுக்குள் சென்று இறைவனது திருஉருவை தொட்டு வணங்கும் உரிமை அனைத்து சாதியினருக்கும் கிடைத்தது. அதை அந்த  நிகழ்வை நினைவூட்டும் வகையில், துப்புரவு தொழிலாளிகள் பல காலமாக வணங்கி வந்த ''ஆத்திமூட்டை'' (அதாவது ஸ்தலவிருட்சகமான ''ஆத்தி'' மரத்தின் அடிமரத்தை ) இபொழுதும், கோவிலில் நுழைந்து தெய்வ வழிபாடு செய்யும் உரிமை கிடைத்த பிறகும், ஆத்தி மரத்தின் அடியில் உள்ள நாகர்களுக்கு ''பங்குனி உத்திர'' தினத்தன்று எண்ணை அபிசேகம் செய்து புது பட்டு உடுத்தி, ஆத்திசாமிக்கு  பணிவிடை செய்து அவற்றை நாகருக்கு படைத்து பணிவிடை செய்துவருகிறார்கள் உடன்குடியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள்