அருள்மிகு வயனப்பெருமாள்

           அருள்மிகு வயணப்பெருமாள் செல்லமாக ராவுத்தர் என்று இஸ்லாமியர்கள் பெயராலும்  அழைக்கப்படுகிறார் 

அருள்மிகு அனந்தம்மாள்


                      தாயாரின் மந்திர புன்னகை பார்க்க பார்க்க பரவசமூட்டும் ஜீவமுகம் உயிரோடும் கண்கள் எத்தனை தடவை பார்த்தாலும், எவ்வளவு நேரம் பார்த்தாலும் நமது  கண்களை  அகற்ற  இயலாத  தாயாரின்  வசீகரமுகம்  இதனைகான இந்தொரு ஜன்மம் போதுமோ ???  மறுஜன்மம் ஓன்று  இருக்குமேயானால் அப்பொழுதும் உன்னை கண்டு வணங்கும் அருகதையை எனக்கு அருள்வாய் அம்மா...

பெரியசாமி சன்னதி நிலை வாசல்

             
 பெரியசாமி சன்னதி தெற்கு திசை  நிலை வாசல்



குதிரைசுவாமி மண்டபம்



பூஜைகால அட்டவணை

    மார்கழி மாதம் மட்டும் காலசந்தி பூஜை காலை ஆறு மணிக்கு முன்பே முடிந்துவிடுகிறது, அதன் பிறகு உச்சிகால பூஜைக்கு காலை பதினோரு மணிக்குதான் நடை திறக்கப்படுகிறது 

கோயில் மண்டபம்

                                  புதுபிக்கப்பட்ட பரவசமூட்டும் பக்தி மண்டபங்கள். கோவிலில் நன்கொடையாக பக்தர்கள் தங்க மண்டபம் கட்டி கொடுத்தவர்களுக்கு  பெரியசாமியின் பரிபூரண அருள் கிடைக்கட்டும்.

ஆத்திசாமி சன்னதி

            ஆத்திசாமி சன்னதி கதவுகளில் தெய்வீக கலையம்சம்

ஆத்திசாமி சன்னதி,

                                                   ஹரி ஓம் ராமானுஜாய

பெரியசுவாமி

         பெரியசாமி சன்னதியில் தற்ப்பொழுது உள்ள விக்ரகத்திற்க்கு முன்பு இருந்த விக்ரகத்தை சன்னதியின் வடகிழக்கு மூலையில் வைத்து அதன் மேல் பீடம் அமைத்து வணங்கப்பட்டுவருகிறது

தூண்

பங்குனி உத்திரம் திருவிழா

 


 அந்த காலத்தில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கொடுத்த பணிவிடை பிரசாதத்தை அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்ததாக கூறி மக்கள் ஒருவரும் வாங்க மறுத்துவிட்டனர் அவர் அந்த வருத்தத்தில் அழுது புலம்பி தெய்வத்திடம் முறையிட்டு அசந்து தூங்கிவிட்டார் அப்பொழுது அவர் கனவில் பெரியசாமி தோன்றி ஒரு இடத்தை காட்டி அங்கு பிரசாதத்தை வாழைஇலை போட்டு  மூடி புதைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டு அடுத்தவருடம் வந்து திறந்து பார் எனக்கூறி மறைந்தார், அவரும் அதன்படி செய்துவிட்டு சென்றார்.
     மறுவருடம் வந்து புதைத்து வைத்த பிரசாதத்தை எடுத்து பார்த்த துப்புரவு தொழிலாளியும் மற்றவர்களும் அப்பொழுதுதான் ஆக்கிய சாதம் போன்று ஆவிபறக்க புத்தம் புதியசாதமாக கண்டு ஆச்சரியமடைந்து, பக்திபரவசத்தில் மூழ்கினார்கள், அந்த பிரசாதத்தை வாங்கிக்கொள்ள மக்களனைவரும்  போட்டாபோட்டி போட்டுக்கொண்டு சாதி வேறுபாடு பார்க்காமல் வாங்கி சென்றார்கள். அந்த இடம் பெரியபிராட்டி சன்னதிக்கு தென்புறம் உள்ள  புளியமரம் அமைந்துள்ள இடமாகும், அன்றுமுதல் தீண்டமையை ஒழித்து ஆண்டவனின் முன் அனைவரும் சமம் என்பதை அருள் மிகு பெரியசாமி தன திருவிளையாடல் மூலம் உலகத்தவரை உணரச்செய்தார்.இதனால் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களை கோயிலுக்குள்  அனுமதிக்காத அந்த காலத்தில்  அனைவரும் கோயிலுக்குள் சென்று இறைவனது திருஉருவை தொட்டு வணங்கும் உரிமை அனைத்து சாதியினருக்கும் கிடைத்தது. அதை அந்த  நிகழ்வை நினைவூட்டும் வகையில், துப்புரவு தொழிலாளிகள் பல காலமாக வணங்கி வந்த ''ஆத்திமூட்டை'' (அதாவது ஸ்தலவிருட்சகமான ''ஆத்தி'' மரத்தின் அடிமரத்தை ) இபொழுதும், கோவிலில் நுழைந்து தெய்வ வழிபாடு செய்யும் உரிமை கிடைத்த பிறகும், ஆத்தி மரத்தின் அடியில் உள்ள நாகர்களுக்கு ''பங்குனி உத்திர'' தினத்தன்று எண்ணை அபிசேகம் செய்து புது பட்டு உடுத்தி, ஆத்திசாமிக்கு  பணிவிடை செய்து அவற்றை நாகருக்கு படைத்து பணிவிடை செய்துவருகிறார்கள் உடன்குடியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் 

தினசரி மந்திரம் சொல்லி வழிபடுவோம்

       இப்புவி வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை, நாம் நமது பிரச்சனைகளின் தீவிரத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழவும், குடும்ப சிக்கல்கள் தீரவும், தொழில் வளர்ச்சியடையவும், பொருளாதாரத்தில் மேம்பட்டு வளமுடன் வாழவும், தினசரி '' ஹரி ஓம் ராமானுஜாய '' மந்திரம் சொல்லி வழிபடுவோம் வளம் பெறுவோம், இந்த மந்திரம் சொல்லி பலனடைந்தோர் செல்வ வளத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆத்திசுவாமி வரலாறு

    முன்பு ஒரு காலத்தில் இன்றைய ஆத்திகோவில், ஆதிகோவிலாக (பழைய) இருந்த பொழுது, மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதி ஒருவன் தினசரி ஆகாய மார்க்கமாக வந்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான், ஒரு நாள் பெரியசுவாமிகள் கோயிலுக்கு சென்றார், அங்கே பூட்டப்பட்டிருந்த கோயில் கதவுகளின் மேல் தனது கையை வைத்தார் உடனே திறந்து கொண்டது, உள்ளே சென்ற சுவாமிகள் பூஜைகள் செய்து விட்டு திரும்பினார், பிறகு கதவு தானே தாள் இட்டுக்கொண்டது, வழக்கம் போல பூஜை செய்ய வந்த மந்திரவாதி, கதவை திறந்து உள்ளே சென்றான் சாமிக்கு பூஜை செய்துள்ளதை பார்த்து பூட்டிய கதவுகள் அப்படியே இருக்க யார் உள்ளே வந்திருக்க முடியும் என மந்திரவாதி குழம்பினான், கோயில் அருகில் தங்கி இருந்த பெரியசாமிகளிடம் சென்று பூஜை செய்தது யார்? எனகேட்டான் அதற்க்கு சாமிகள் ''தான்'' தான் என்பதை ஒப்புக்கொண்டார், மந்திரவாதி இனிமேல் இந்தமாதிரி பூஜை செய்யக்கூடாது என மிரட்டிவிட்டு சென்றான்.
                மறுநாள் பூஜை செய்ய மந்திரவாதி வந்தான், முதல் நாள் போலவே பூஜை நடந்திருப்பதை பார்த்தவன், கோபம் அடைந்து சாமிகளிடம் சென்று நேற்றே நீ பூஜை செய்யக்கூடாது என கூறினேன்  பின்பும் ஏன் பூஜை செய்தாய் என கேட்டான் அதற்க்கு சாமிகள் கோவில் திறந்து இருந்தது நான் பூஜை செய்தேன் நீ கோவிலை நன்றாக பூட்டிசெல் என அமைதியாக கூறினார். சுவாமிகளின் பதிலை கேட்ட மந்திரவாதி கோவிலுக்கு சென்று கதவை நன்றாக சாத்தி வலுவாக பூட்டி சரிபார்த்து சென்றான். மறுநாள் வந்தான் கோயில் திறந்து பூஜை செய்திருந்தது கண்டான் கடும் கோபம் கொண்டு சாமிகளிடம் சென்று நீ இந்த இடத்தை விட்டு சென்று விடு இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்தான், அதற்க்கு சாமிகள் நான் பூஜை செய்த முறைகள் தவறா? அல்லது திறந்திருந்த கோவிலில் பூஜை செய்தது தவறா ? இதில் எதுவும் தவறில்லை எனவே எனக்கு எந்த தீங்கும் நேராது என்றார், இதைக்கேட்ட மந்திரவாதி கோபமுற்று சாமிகளை பழி வாங்க வேண்டுமென தீர்மாணம் செய்து தனது குருவிடம் நடந்ததை கூறி, சுவாமிகள் மீது ஏவல் பூஜை செய்து அவரை கொல்லுமாறு  பூதம் ஒன்றை ஏவினர், சாமிகள் தன்னை கொல்ல வந்த பூதத்தை பார்த்து ''சாந்தி'' என சொல்லவும், அந்த பூதம் சாமிகளின் காலடியில் அமைதியாக மண்டியிட்டு அமர்ந்தது விட்டது, சென்ற பூதம் திரும்பி வராததால் மந்திரவாதி மற்றுமொரு கொடுமையான பூதத்தை பழிவாங்க அனுப்பி வைத்தான் அந்த பூதமும் சாமிகள் ''சாந்தி'' என சொல்ல அமைதியாகிவிட்டது,
                    அனுப்பிய பூதங்கள்  செயலற்று போனதால் மந்திரவாதி மிக கோபம்  கொண்டு யாராலும் வெல்ல முடியாது என கருதப்படும் ''ருத்ரபூதத்தை '' அனுப்பி வைத்தான், ருத்ர பூதம் சாமிகளை கொல்ல விண்ணுக்கும் மண்ணுக்கும் தீப்பிழம்பாய் கொடுரமாக சென்று சாமிகளை நெருங்கியது சாமிகள் சாந்தி என்றார் ஆனாலும் பூதம் அடங்கவில்லை மேலும் தீவிரமாகியது அதைக்கண்ட சாமிகள் பதறினார் உடனே அன்னையை (மீனாட்சியம்மன்  அதாவது பெரிய பிராட்டி )நினைத்து வணங்கினார் உடனே அவ்விடம் வந்த அன்னை மிகவும் பலம் வாய்ந்த அந்த பூதத்தை பார்த்து ''ஆற்றி இரு'' (அதாவது ''ஆத்தி இரு '' அல்லது ஆறுதலாக இரு) என கட்டளை இட்டார் பூதம் சற்று அமைதியானது, பூதத்தை பார்த்து  அன்னை நீ வந்த காரணமென்ன ? என்று வினாவினார் அதற்க்கு ''ருத்ரபூதம்'' அருகில் இருந்த சுவாமிகளை காட்டி இவரை கொன்று வர எனக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது எனக்கூறி இவர் தங்களின் பக்தன் என எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் நான் வந்திருக்கவேமாட்டேன் எனக்கூறி மன்னிப்பு கோரியது. அன்னை கருணையுடன் பூதத்தை மன்னித்து நீ இங்கேயே கோவிலில் ''ஆத்தி இரு'' உனக்கு இரு வகை படையல் உண்டு என அருளினார், ருத்ரபூதமும் அன்னையை வணங்கி அப்படியே ஏற்றுக்கொண்டு, தான் இப்பொழுது எழும்பியதால் எப்படியும் நரபலி கொள்ளவேண்டும் அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்க, அன்னை உன்னை அனுப்பியவனையே பலி கொள்ளுமாறு சொல்ல தன்னை அனுப்பிய மந்திரவாதியை நரபலி கொண்டு அமைதியாகியது, பின்னர் அன்னையிடம் கொடுத்த வாக்கின் படி இங்கு வந்து அமர்ந்தது, அன்னையின் வாக்குபடி ஆத்தி கோயிலில் மற்ற பணிவிடைகளோடு  ''மச்ச பணிவிடையும்'' ''கீரிச்சுட்டான்'' பணிவிடையும் சேர்த்து கொடுக்கப்பட்டு வருகிறது 

பாதக்கரை சாமி

       செட்டியாபத்திலே இருந்து சோலையப்பர் வடக்கு திசை நோக்கி செல்லவேண்டும் என நினைத்தார்,  தன் எண்ணத்தை குருவிடம் கூறவும், அவர் சீடரின் ஆயுட்காலம் முடிவு நெருங்குவதை உணர்ந்து '' உன் விருப்பபடி செல் '' என்று விடை கொடுத்து அனுப்பினார் குருவின் உத்தரவு கிடைத்தவுடன் மகிழ்ந்து வடக்கு நோக்கி புறப்பட்டார், செல்லும் வழியில்  பெரியசாமிகளின் சீடர்களில் ஒருவர் ''நாலுமாவடி''  என்னும் ஊர் அருகில் பாதை கரையில் இயற்க்கை எய்தினார். எனவே அவரை மக்கள் ''பாதக்கரை சாமி'' என்றழைத்து வழிபடுகின்றனர். நாலுமாவடி பாதக்கரை சாமி கோவிலை பார்வையிட http://www.rightplus.blogspot.in/  க்கு செல்லவும் 

மெய்சீடர் சோலையப்பசாமிகள்

செட்டியாபத்திலே சுவாமிகள் தங்கயிருந்த போது ஒரு முறை மிகவும் நோய்வாய்ப்பட்டார்,  அந்த சமயத்தில்   தமது சீடர் சோலையப்பரை சோதித்து பார்க்க நினைத்து சுவாமிகள்  சோலையப்பர் பார்க்கும்படியாக  ''வாந்தி'' எடுத்தார். அதைக்கண்ட சோலையப்பர் தனது இருகைகளால் வாந்தியை ஏந்திக்கொண்டு  சுவாமிகளிடம் இதை என்ன செய்யவென்று கேட்க எதையும் புதைக்காத இடத்தில் புதைக்கும்படி கூறினார். ''எதையும் புதைக்காத இடம் '' என்பதை ஒரு  கணம் சிந்தனை செய்த சோலையப்பர் அதை அப்படியே குடித்து விட்டார்; சாமிகள் சோலையப்பரின்  செயலை எண்ணி எண்ணி வியந்தார், பின்பு ஒருநாள் சுவாமிகள்,  சோலையப்பரிடம் ''வெற்றிலை இடித்து வா'' என கூற வெற்றிலை இடிக்கும் உரல் எங்கு தேடியும் கிடைக்காததால், நேரமாகி கொண்டிருந்ததாலும் சோலையப்பர் தனது வாயில் போட்டு மென்று உரலில் இடித்தது போல் சுவாமிகளிடம் கொடுத்தார், பெற்றுக்கொண்டு வாயில் போட்டு தின்ற சாமிகள் என்றுமில்லாத அளவுக்கு ருசியாய் இருக்க கண்டு ''இடித்த உரலை கொண்டு வா'' என்றார். இதை கேட்ட சோலையப்பர் செய்வதறியாது திகைத்தார். மறுகணம் தன தலையை கொய்து ''இதோ அந்த உரல் '' என கொடுத்தார்.அதைக்கண்டு அதிர்ந்த சாமிகள் தம்மிடம் கற்ற வித்தையை தன்னிடமே காட்டுகிறானே என மனதில் கொண்டு, ''அற்றதலை அப்படியே பொருந்தட்டும்'' என்று சுவாமிகள் கூறவும்.தலை அப்படியே போருந்திக்கொண்டது.
               தலை பொருந்தியதை கண்ட சாமிகள் மனதில் கோபம் குறையாது என்னிடம் கற்ற வித்தையை என்னிடமே காட்டியதால் நீ செல்லும் வழியில் நிலம் வெடிப்போடு உள்ள இடத்தில் நீ சிரம் வெடித்து இறப்பாய் என சாபமிட்டார். உண்மை என்னவென்று தெரியாது சுவாமிகள் சாபமிட்டு விட்டாரே என கலங்கி கோபமுற்ற சோலையப்பர் குரு என்றும் பாராது ''நீர் அனாதையாய் இறந்து போவீர்'' என எதிர் சாபமிட்டார்.

பெரிய சுவாமிகளும் அவரின் சீடர் சோலையப்ப சுவாமிகளும்


          நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரிலே  வைஷ்ணவ பிராமணர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்த காலம்.வைஷ்ணவமே உயர்ந்தது என்று மற்றவர்களை இழிவுபடுத்தி வந்தனர். ( இப்பொழுதும் அப்படித்தான் உள்ளனர் ) அவர்களின் ஆணவத்தை அகற்றவும். அதை விட உயர்ந்த வழிபாடு உள்ளது என்பதை உணரவைக்கவும் சிந்தித்தவாறு சுவாமிகள் தூங்கிவிட்டார்.
      அவரின் கனவில் அன்னை தோன்றி ஆழ்வார் திருநகரி சென்று திருப்புளி ஆழ்வாரை காணும் படி கூறினார், அதேவேளையில் ஆழ்வார் திருநகரில் புளியமரத்தடியில் அவதரித்து ''தான் வளர வளர தொட்டிலும் வளரும்படி வரம் பெற்று'' யாரிடமும் பேசாதிருக்கும் திருப்புளி ஆழ்வாரின் கனவில் அன்னை தோன்றி பெரியசாமி வருவதை தெரியப்படுத்தினார்.மறுநாள் காலையில் பெரியசாமிகள் தன தலைமை சீடர் சோலையைப்பருடன் ஆழ்வார் திருநகரி சென்றார்.
         அங்கே சில அற்புதங்களை நிகழ்த்த எண்ணிய நம்சுவாமிகள் , அங்கு சிலகாலம் தங்கி வாழை இலை வியாபாரம் செய்தார், வாழை இலை மரத்தில் எடுக்காமல் எச்சில் இலைகளை பொறுக்கி கழுவி விற்று வந்தனர், இவர்களிடம் வாங்கிய இலையில் சாப்பிட்டால் சாப்பாடு மிகவும் ருசியாக இருந்தது எனவே பிரமணர்கள் இவர்களிடம் இலைகள் ஆர்வத்தோடு வாங்கி சென்றார்கள். வியாபாரம் பல மடங்கு பெறுகியது, அதனால் இலைகளை சரிவர கழுவாமல் சுத்தபடுத்தாமல் விற்பனை செய்தனர், அதை தெரிந்து கொண்ட பிரமணர்கள் தாங்கள் இவ்வளவு நாட்களும் எச்சில் இலைகளில் சாப்பிட்டதை உணர்ந்து இலை வாங்குவதை நிறுத்திவிட்டனர் எனவே அந்த திருவிளையாடலை சுவாமிகள் அத்துடன் நிறுத்திக்கொண்டார் .
                       சில நாட்கள் கழித்து பெரியசாமிகளும் சோலையப்பரும் தாமிரபரணி ஆற்றில் மீன்களை பிடித்து வறுத்து இடித்து ''திருவரங்க பொடி'' என கூறி சாம்பாருக்கு மிகவும் சுவை கூட்டவும்,மணம் கூட்டவும் பயன்படும் என்று விற்று வந்தனர், அதைவாங்கி பயன் படுத்திய பிரமணர்கள் அதை வாங்கி பயன்படுத்தி அதன் ருசியில் திளைத்தனர், வியாபாரம் அமோகமாக பெருகியது. நாளாக நாளாக சாமிகள் மீன்களை சரிவர வறுக்காமலும், இடிக்காமலும் விற்றனர், அதை அறிந்த பிராமணர்கள் தாங்கள்  அசைவம் சாப்பிட்டதை உணர்ந்து சாமிகளை விரட்டியடித்தார்கள் .
                    ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்,  சாமிகள் அமாவாசை அன்று சைவமாகவும் பௌர்ணமி அன்று அசைவமாகவும் பூஜை செய்யும் வழக்கமுடையவர். அன்று பௌர்ணமியாக இருந்ததால் பௌர்ணமி பூஜை செய்ய அருகே இருந்த ஆட்டு மந்தையில் ஆடு ஒன்றை பிடித்து அதற்க்கு பாதப்பால் கொடுத்து அதை அறுத்து சமைத்துக்கொண்டிருந்தார் அதையறிந்த பிராமணர்கள்   ஆங்கிலேய ''பிஷப்''பிடம் போய் எங்களது பிராமன அஹ்ரகாரத்தில் அசைவ பூஜை செய்து அதன் புனிதத்தை கெடுக்கிறார் என புகார் கொடுத்தனர். உடனே ''பிஷப் '' சாமிகள் சமையல் செய்யுமிடம் சென்றார் அங்கு அவர்  ஆட்டை அறுத்து வைத்திருப்பதை பார்த்து இது என்னவென்று கேட்க சாமிகள் ஆட்டு இறைச்சியை காட்டி இது ''தொசம'' அதாவது வாழைக்காய் துண்டு என்றும் எலும்புகளை காட்டி ''கரண்'' அதாவது முருங்கைக்காய் என்றும், தோலை காட்டி சட்டை என்றும் அதாவது வாழைக்காய்  தோல் என்றும் உப்பை சீனி என்றும் அகப்பையை கணக்குபிள்ளை என்றும்,முட்டையை  ''அண்டம்''  என்றும் குடலை ''பூசப்பெட்டி'' என்றும், ஒவ்வொன்றுக்கும் மாற்று பெயர்களை கூற அன்னையின் அருளால் அனைத்தும் அப்படியே அந்ததந்த பொருளாக இருக்க கண்டார் ''பிஷப்'' .தன்னை அழைத்து வந்தவர்களை நோக்கி இனிமேல் இது போல் பொய் தகவல் கொடுத்தால் உங்கள் மீது தான் நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி சென்றார், பின்பு பூஜை முழுவதையும் முடித்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.