மெய்சீடர் சோலையப்பசாமிகள்

செட்டியாபத்திலே சுவாமிகள் தங்கயிருந்த போது ஒரு முறை மிகவும் நோய்வாய்ப்பட்டார்,  அந்த சமயத்தில்   தமது சீடர் சோலையப்பரை சோதித்து பார்க்க நினைத்து சுவாமிகள்  சோலையப்பர் பார்க்கும்படியாக  ''வாந்தி'' எடுத்தார். அதைக்கண்ட சோலையப்பர் தனது இருகைகளால் வாந்தியை ஏந்திக்கொண்டு  சுவாமிகளிடம் இதை என்ன செய்யவென்று கேட்க எதையும் புதைக்காத இடத்தில் புதைக்கும்படி கூறினார். ''எதையும் புதைக்காத இடம் '' என்பதை ஒரு  கணம் சிந்தனை செய்த சோலையப்பர் அதை அப்படியே குடித்து விட்டார்; சாமிகள் சோலையப்பரின்  செயலை எண்ணி எண்ணி வியந்தார், பின்பு ஒருநாள் சுவாமிகள்,  சோலையப்பரிடம் ''வெற்றிலை இடித்து வா'' என கூற வெற்றிலை இடிக்கும் உரல் எங்கு தேடியும் கிடைக்காததால், நேரமாகி கொண்டிருந்ததாலும் சோலையப்பர் தனது வாயில் போட்டு மென்று உரலில் இடித்தது போல் சுவாமிகளிடம் கொடுத்தார், பெற்றுக்கொண்டு வாயில் போட்டு தின்ற சாமிகள் என்றுமில்லாத அளவுக்கு ருசியாய் இருக்க கண்டு ''இடித்த உரலை கொண்டு வா'' என்றார். இதை கேட்ட சோலையப்பர் செய்வதறியாது திகைத்தார். மறுகணம் தன தலையை கொய்து ''இதோ அந்த உரல் '' என கொடுத்தார்.அதைக்கண்டு அதிர்ந்த சாமிகள் தம்மிடம் கற்ற வித்தையை தன்னிடமே காட்டுகிறானே என மனதில் கொண்டு, ''அற்றதலை அப்படியே பொருந்தட்டும்'' என்று சுவாமிகள் கூறவும்.தலை அப்படியே போருந்திக்கொண்டது.
               தலை பொருந்தியதை கண்ட சாமிகள் மனதில் கோபம் குறையாது என்னிடம் கற்ற வித்தையை என்னிடமே காட்டியதால் நீ செல்லும் வழியில் நிலம் வெடிப்போடு உள்ள இடத்தில் நீ சிரம் வெடித்து இறப்பாய் என சாபமிட்டார். உண்மை என்னவென்று தெரியாது சுவாமிகள் சாபமிட்டு விட்டாரே என கலங்கி கோபமுற்ற சோலையப்பர் குரு என்றும் பாராது ''நீர் அனாதையாய் இறந்து போவீர்'' என எதிர் சாபமிட்டார்.

கருத்துகள் இல்லை: