பெரிய சுவாமிகளும் அவரின் சீடர் சோலையப்ப சுவாமிகளும்


          நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரிலே  வைஷ்ணவ பிராமணர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்த காலம்.வைஷ்ணவமே உயர்ந்தது என்று மற்றவர்களை இழிவுபடுத்தி வந்தனர். ( இப்பொழுதும் அப்படித்தான் உள்ளனர் ) அவர்களின் ஆணவத்தை அகற்றவும். அதை விட உயர்ந்த வழிபாடு உள்ளது என்பதை உணரவைக்கவும் சிந்தித்தவாறு சுவாமிகள் தூங்கிவிட்டார்.
      அவரின் கனவில் அன்னை தோன்றி ஆழ்வார் திருநகரி சென்று திருப்புளி ஆழ்வாரை காணும் படி கூறினார், அதேவேளையில் ஆழ்வார் திருநகரில் புளியமரத்தடியில் அவதரித்து ''தான் வளர வளர தொட்டிலும் வளரும்படி வரம் பெற்று'' யாரிடமும் பேசாதிருக்கும் திருப்புளி ஆழ்வாரின் கனவில் அன்னை தோன்றி பெரியசாமி வருவதை தெரியப்படுத்தினார்.மறுநாள் காலையில் பெரியசாமிகள் தன தலைமை சீடர் சோலையைப்பருடன் ஆழ்வார் திருநகரி சென்றார்.
         அங்கே சில அற்புதங்களை நிகழ்த்த எண்ணிய நம்சுவாமிகள் , அங்கு சிலகாலம் தங்கி வாழை இலை வியாபாரம் செய்தார், வாழை இலை மரத்தில் எடுக்காமல் எச்சில் இலைகளை பொறுக்கி கழுவி விற்று வந்தனர், இவர்களிடம் வாங்கிய இலையில் சாப்பிட்டால் சாப்பாடு மிகவும் ருசியாக இருந்தது எனவே பிரமணர்கள் இவர்களிடம் இலைகள் ஆர்வத்தோடு வாங்கி சென்றார்கள். வியாபாரம் பல மடங்கு பெறுகியது, அதனால் இலைகளை சரிவர கழுவாமல் சுத்தபடுத்தாமல் விற்பனை செய்தனர், அதை தெரிந்து கொண்ட பிரமணர்கள் தாங்கள் இவ்வளவு நாட்களும் எச்சில் இலைகளில் சாப்பிட்டதை உணர்ந்து இலை வாங்குவதை நிறுத்திவிட்டனர் எனவே அந்த திருவிளையாடலை சுவாமிகள் அத்துடன் நிறுத்திக்கொண்டார் .
                       சில நாட்கள் கழித்து பெரியசாமிகளும் சோலையப்பரும் தாமிரபரணி ஆற்றில் மீன்களை பிடித்து வறுத்து இடித்து ''திருவரங்க பொடி'' என கூறி சாம்பாருக்கு மிகவும் சுவை கூட்டவும்,மணம் கூட்டவும் பயன்படும் என்று விற்று வந்தனர், அதைவாங்கி பயன் படுத்திய பிரமணர்கள் அதை வாங்கி பயன்படுத்தி அதன் ருசியில் திளைத்தனர், வியாபாரம் அமோகமாக பெருகியது. நாளாக நாளாக சாமிகள் மீன்களை சரிவர வறுக்காமலும், இடிக்காமலும் விற்றனர், அதை அறிந்த பிராமணர்கள் தாங்கள்  அசைவம் சாப்பிட்டதை உணர்ந்து சாமிகளை விரட்டியடித்தார்கள் .
                    ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்,  சாமிகள் அமாவாசை அன்று சைவமாகவும் பௌர்ணமி அன்று அசைவமாகவும் பூஜை செய்யும் வழக்கமுடையவர். அன்று பௌர்ணமியாக இருந்ததால் பௌர்ணமி பூஜை செய்ய அருகே இருந்த ஆட்டு மந்தையில் ஆடு ஒன்றை பிடித்து அதற்க்கு பாதப்பால் கொடுத்து அதை அறுத்து சமைத்துக்கொண்டிருந்தார் அதையறிந்த பிராமணர்கள்   ஆங்கிலேய ''பிஷப்''பிடம் போய் எங்களது பிராமன அஹ்ரகாரத்தில் அசைவ பூஜை செய்து அதன் புனிதத்தை கெடுக்கிறார் என புகார் கொடுத்தனர். உடனே ''பிஷப் '' சாமிகள் சமையல் செய்யுமிடம் சென்றார் அங்கு அவர்  ஆட்டை அறுத்து வைத்திருப்பதை பார்த்து இது என்னவென்று கேட்க சாமிகள் ஆட்டு இறைச்சியை காட்டி இது ''தொசம'' அதாவது வாழைக்காய் துண்டு என்றும் எலும்புகளை காட்டி ''கரண்'' அதாவது முருங்கைக்காய் என்றும், தோலை காட்டி சட்டை என்றும் அதாவது வாழைக்காய்  தோல் என்றும் உப்பை சீனி என்றும் அகப்பையை கணக்குபிள்ளை என்றும்,முட்டையை  ''அண்டம்''  என்றும் குடலை ''பூசப்பெட்டி'' என்றும், ஒவ்வொன்றுக்கும் மாற்று பெயர்களை கூற அன்னையின் அருளால் அனைத்தும் அப்படியே அந்ததந்த பொருளாக இருக்க கண்டார் ''பிஷப்'' .தன்னை அழைத்து வந்தவர்களை நோக்கி இனிமேல் இது போல் பொய் தகவல் கொடுத்தால் உங்கள் மீது தான் நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி சென்றார், பின்பு பூஜை முழுவதையும் முடித்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

1 கருத்து:

Unknown சொன்னது…

GOD BLESS YOU.
CONTINUE THE WORK.