குழந்தை வரம் தந்த குலதெய்வத்திற்கு, முடி காணிக்கை கொடுத்து, காது குத்தி கொள்கிறார்கள்
ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
Sri Periyaswamy
அருள் மிகு பெரியசுவாமியின் சயன கட்டில், இந்த இடத்தின் அருகில் பணிவிடை பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த மண்டபம் ஏரல் அருணாசல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடாரால் கட்டி கொடுக்கப்பட்டது.
Sri Periyaswamy Pooja
எல்லா தெய்வ சன்னதியிலும் கடவுளுக்கு அடுத்த நிலையில் பூசாரிகளுக்கு மரியாதையை கொடுக்கபடுகிறது, பக்தர்கள் தெய்வ திரு உருவை நெருங்க முடியாது, ஆனால் இங்கு கடவுளை தொட்டு வணங்கலாம், வணங்கும் போது பூசாரிகளும் (அண்ணாவி) பக்தர்களுடன் நின்று பூஜை செய்கிறார்கள் இது கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை குறிக்கிறது, இத் திருக் கோவிலின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே மிகவும் உன்னதமான இருந்து உள்ளது , இந்தக்கோவில் தெய்வங்களை நம் குல தெய்வமாக அடைய பெற்றதற்கு நாம் பெருமை கொள்ளுவோம்,
ஹரி ஓம் ராமானுஜாய
ஹரி ஓம் ராமானுஜாய
ஹரி ஓம் ராமானுஜாய...................
HINDU + ISLAAM= Aathiswamy Temple
இத்திருத்தலத்தில் இஸ்லாமியர்களை போன்ற பழக்க வழக்கங்களும் கடைபிடிக்கபடுகின்றன, முஸ்லிம்கள் ''பாத்தியா'' ஓதாமல் ஆட்டு கிடாயகளை பலி இடுவதில்லை, அதை போலவே இங்கும் பணிவிடைக்காக கொண்டு வரும் கால்நடைகளின் காதுகளில் மந்திரம் ஓதி பாதப்பால் கொடுக்கப்பட்ட பின்னர்தான் பணிவிடைக்கு ஆயத்தமாக்கபடுகின்றன, இக் கோவில் பாதப்பால் கொடுக்காமல் செய்யப்படும் பணிவிடைகள், கோவிலில் பாதப்பால் கொடுத்தும் கோட்டைக்கு வெளியில் வைத்து தயார் செய்யப்பட்டவைகளும் பணிவிடை பூஜைக்கு அனுமதிக்க படுவதில்லை
Meakkatti Pooja
மேக்கட்டி பூஜை வரலாறு
,,,,,,,,,
பெரியசுவாமிகள் தான் வெளியில் செல்கையில் துண்டு வேட்டி ஒன்று விரித்தார்போன்று , பெரியசுவாமின் தலைக்கு மேலே பறந்து நிழல் கொடுத்துக்கொண்டு செல்லும் ,மேலே சூரியனைகட்டியதால், ''மேல்கட்டி '' என்ற சொல் நாளடைவில் மேக்கட்டியானது . இதை நினைவு கூறும் முகமாக சித்திரை திருவிழா, தை திருவிழாவின் போது மேக்கட்டி கட்டுகின்றோம்
கோவில் முகவரி (TEMPLE ADDRESS),
IYNTHUVEETU SWAMY THIRUKKOVIL
CHETTIYAPATHU- 628 203
THIRUCHENTHUR- TALUK
THOOTHUKUDI- DISTRIC
TAMILNADU-- INDIA
PHONE-04639-250630
CHETTIYAPATHU- 628 203
THIRUCHENTHUR- TALUK
THOOTHUKUDI- DISTRIC
TAMILNADU-- INDIA
PHONE-04639-250630
Arulmiku Aathiswamy
ஆத்திசுவாமிக்கு, காணிக்கையாக புதிய செருப்புகள் வழங்கப்படுகின்றன ஆனால் சில நாட்கள் கழித்து அவைகளை யாரும் பயண்படுத்தாமலே பயண்படுத்தியது போலவும் கால் தடமும் உள்ளதாகிவிடுகிறது இந்த அதிசயம் ஆத்திசுவாமி அருளால் நடைபெருகிறது, இதை ஆத்தி சுவாமி பயன்படுத்துகிறார் என நம்பும்படியாக இருக்கிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)