108 முறை மந்திரம் சொல்ல எளியவழி

108  முறை மந்திரம் சரியாக சொல்ல பல முறைகள் உண்டு
1 . மல்லிகை பூ மொட்டுகளை 108 எண்ணி எடுத்துக்கொண்டு பூஜையின் போது ஒவ் வொன்றாக சுவாமிகளின் மேல் பணிவாக போட்டு மந்திரம் சொல்லலாம் ஒரு பூவை போட்டதும் ஒருமுறை மந்திரம் சொல்ல வேண்டும்
2 . 108  ருத்ராட்சம் உள்ள மாலையை கையில் வைத்துக்கொண்டு அடையாள ருத்ராட்சத்திலிருந்து ஒரு ருத்ராட்சத்தை நகர்த்தியதும் ஒருமுறை மந்திரம் சொல்லவேண்டும் பின்பு அடுத்த ருத்ராட்சத்தை நகர்த்தியதும் அடுத்த முறை மந்திரம் சொல்லவேண்டும் இப்படியே 108  முறை சொல்லலாம்

3 . இது மிகவும் எளிய வழி நாம் எங்கிருந்தாலும் மற்ற யாரும் நம்மை கவனிக்காமல் நம் மனதுக்கு மட்டும் தெரியும் படி நாம் மந்திரம் சொல்லி இறை அருள் பெறலாம் 108 முறையும் சரியாக சொல்லலாம்
   நமது கை விரல்கள் ஒவ்வோன்றிலும் மூன்று மடக்குகள் உள்ளன,எனவே இடது கையில், சுண்டு விரல் மோதிரவிரல் நடுவிரல் மூன்றையும் தேர்வு செய்து கொள்ளுங்கள், வலது கையில் சுண்டு விரல், மோதிரவிரல், நடுவிரல்,ஆள்காட்டி விரல் நான்கையும் தேர்வு செய்து கொள்ளுங்கள் இப்பொழுது இடது கை மூன்று விரல் மடக்குகள் மொத்தம் ஒன்பது,வலது கை விரல் மடக்குகள் பன்னிரெண்டு ஆக மொத்தம் நூற்றியெட்டு, முதலில் இடது கை சுண்டு விரல் நுனியில் உள்ள முதல் மடக்கில் இது கை பெருவிரல் கொண்டு தொட்டு அடையாளமிட்டு கொள்ளுங்கள்,பின்பு வலக்கை சுண்டுவிரல் நுனியில் வலது கை பெருவிரல் கொண்டு தொட்டு ஒருமுறை மந்திரம் சொல்லுங்கள் அதன் பிறகு வலக்கை சுண்டு விரலில் பெருவிரலை இரண்டாவது மடக்கில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லுங்கள் இப்படியாக நான்கு விரல்களிலும் பன்னிரெண்டு முறை சொல்லிவிட்டு இடது கை சுண்டு விரலில் பெருவிரலை இரண்டாவது மடக்கிற்கு நகர்த்தி அடையாளமிட்டுக்கொள்ளவும் பின்பு வலது கையில் முன்பு போலவே செய்யுங்கள்,இப்படி இடது கை விரல் ஒரு மடக்கிற்கு வலது கைவிரல் பனிரெண்டு மடக்குகள் வீதம் எண்ணுங்கள் 108 சரியாக வரும்
                                
                                       ஹரி ஓம் ராமானுஜாய

திருகார்த்திகை திருவிழா

                                           ''திருகார்த்திகை திருவிழா''
             இக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருகார்த்திகை உற்சவம் மிகவும் சிறப்பானது, உற்சவ நாளன்று காலை செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்த ஆண்களால், கோயிலுக்கு சொந்தமான வாடல்பனை ஒன்றை வெட்டியெடுத்து முழு மரத்தையும் தலை சுமையாக சுமந்து ஆலயத்திற்கு கொண்டுவந்து நிறுத்தி பனை ஓலைகளால் சொக்கப்பனை கட்டப்படுகிறது, பின்பு தீ இட்டு சொக்கபனை கொளுத்தப்படுகிறது, சொக்கப்பனை எரிநத பின்பு அதிலுள்ள ஆத்தி மர குச்சிகளை பக்தர்கள் எடுத்து தங்கள் வீட்டு கூரையின் மீது போட்டு பலன் அடைகிறார்கள் 

கோவில் வரலாறு TEMPLE HISTORY

               ஜாதி பேதமில்லாத கோவில்
  பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஆலய வழிபாட்டு செலவுகளை பஞ்சபாண்டியர்கள் பகிர்ந்து அளித்ததாக வரலாறு உள்ளது. நாயக்கர்கள் படையெடுப்பின்போது, ஆலயத்தை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர்.

                  ''அன்னதானம்'' வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ''தறி இறை''  எனவும்,வியாபாரிகள் ''அங்காடி பாட்டம்''எனவும், மணப்பாடு, ஆலந்தலை  மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும், மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ''இலை கூலம்'' எனவும் ,நங்கை மொழி தேரி-ல் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் "விற்பிடி" எனவும்,ஆடு,மாடு,வளர்த்த குலசகரபட்டினம் கோனார்கள் ''இடைப்பாட்டம்''எனவும்,தென்னை பனை மர  பரமன் குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ''தறி இறை''  எனவும்,வியாபாரிகள் ''அங்காடி பாட்டம்''எனவும், மணப்பாடு, ஆலந்தலை  மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும், மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ''இலை கூலம்'' எனவும் ,நங்கை மொழி தேரி-ல் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் "விற்பிடி" எனவுங்கள் வைங்த்திருப்போர்கள் "மரவிறை'' எனபரமன் குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ''தறி இறை''  எனவும்,வியாபாரிகள் ''அங்காடி பாட்டம்''எனவும், மணப்பாடு, ஆலந்தலை  மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும், மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ''இலை கூலம்'' எனவும் , 

இந்த பொருளாதாரத்தைக்கொண்டு ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது

திருமந்திரம்

    'ஹரி ஓம் ராமானுஜாய'
          இந்த திருமந்திரத்தை தினசரி ஓதி வந்தால், திருமணத்தடைகள் நீங்கும், நல்லவரன்கள் அமைவார்கள், குழந்தை பாக்கியம் ஏற்படும்,தொழிலில் ஏற்பட்ட தேக்கநிலை சீர்படும்,தொழில் மேன்மையடையும்,  வேலையாட்கள் தொந்தரவுகள் குறைந்து  நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பொருளாதர விரையம் குறையும், நவகிரகங்களினால் ஏற்ப்படும் பாதிப்புகள் நிவர்த்தியாகும், மனோதைரியம் கிடைக்கும், நிம்மதி ஏற்படும் , எடுத்த நல்ல காரியங்கள் சித்தியாகும், எதிரிகள் இல்லாது போவர், காரியதடைகள் நீங்கும், புகழும் கீர்த்தியும் கிட்டும் எதிர்காலம் இனிமையானதாக மாறும்

Sri Vayanapperumaal

                   அருள்மிகு வயனப்பெருமாள், தெற்கு வீட்டையா  என்றும் அழைக்கப்படுகிறார், உடம்பில் ஏற்ப்படும் கட்டிகள் நீங்க, சிறுநீர் கழிக்கும் போது ஏற்ப்படும் கஷ்டத்தை போக்கவும் ,வெள்ளியாலான பொருட்களை காணிக்கை செலுத்தி நோய் நீங்கப்பெறுகிறார்கள்

Hanumaan


அனுமன் சன்னதி மண்டபத்தின் தெற்கு பக்க தோற்றம் 

Sri Thiruppuli Aalvaar

பக்தர்களின் குரலுக்கு ஓடோடி வரும் நிலையில் எம் பெருமான் நாராயணன் பருந்து வாகனத்தின் மீது அமர்ந்து பறந்த வண்ணம் உள்ளார். இவர் இத் திருத்தலத்தில் திருப்புளி ஆழ்வாராக திருநாமம் பெற்று விளங்குகிறார், இது வேறு எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ காட்சியாகும் .( நாம் தான் அழைக்க வேண்டும் அவனே கதி என்று )

Aathiswamy (ஆத்திசுவாமி)

ஆத்தி சுவாமியின் அருள்மிகு தோற்றம்

Sri Aathiswamy

இக்கோவில் பக்தர்கள் தங்களின் இல்லத்தில் நடைபெறும் விசேசங்களுக்கு முதலில் ஐந்து வீட்டு தெய்வங்கள் அனைத்திற்க்கும்  அழைப்பிதழ் வைத்து அழைத்த  பின்புதான் மற்றவர்களை அழைக்கின்றனர் 

Aathi Swamy Sannathi



ஆத்தி சுவாமி சன்னதி வாசலும், வாசல் கதவுகளில் கலை நயம் மிகுந்த வேலைபாடுகளும்

Sri Vayanapperumaal Sannathi


வயனப்பெருமாள்  சன்னதி மண்டபத்தின் முகப்பு  தோற்றம்

Palliyarai Mandabavam

இந்த மண்டபவம் ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாச்சல சுவாமி  அவர்களின் தாய் தந்தையரால் குழந்தை வரம் கிடைத்ததற்காக கட்டிக் கொடுக்கப்பட்டது 

விளக்கு


கல்லினால் செய்த குத்துவிளக்கு

Sri Vayanapprumaal


முஸ்லிம் மசூதி போல் அமைந்துள்ள வயனப்பெருமாள் சன்னதி மேல் கூரை