ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
Aathiswamy Kovil
-: ஆன்மா உயிர் விளக்கம் :-
ஓர் அறிவு உள்ள மண்ணுக்கு உயிர் உண்டு , இரண்டு அறிவு உள்ள மரம் செடி கொடிகளுக்கு உயிர் உண்டு, மூன்று அறிவு உள்ள ஊர்ந்து செல்லும் ஜந்துக்களுக்கு உயிர் உண்டு, நாலறிவு கொண்ட மிருகங்களுக்கு உயிர் உண்டு, ஐந்தறிவு கொண்ட பறவைகளுக்கு உயிர் உண்டு, ஆனால், அவைகளுக்கு, ஆன்மா இல்லை, ஆறறிவு கொண்ட மனிதனுக்கு மட்டும்தான் ஆன்மா உண்டு.
ஓர் அறிவு உள்ள மண்ணுக்கு உயிர் உண்டு , இரண்டு அறிவு உள்ள மரம் செடி கொடிகளுக்கு உயிர் உண்டு, மூன்று அறிவு உள்ள ஊர்ந்து செல்லும் ஜந்துக்களுக்கு உயிர் உண்டு, நாலறிவு கொண்ட மிருகங்களுக்கு உயிர் உண்டு, ஐந்தறிவு கொண்ட பறவைகளுக்கு உயிர் உண்டு, ஆனால், அவைகளுக்கு, ஆன்மா இல்லை, ஆறறிவு கொண்ட மனிதனுக்கு மட்டும்தான் ஆன்மா உண்டு.
மண்ணை தோண்டினால், மரத்தை வெட்டினால் ,மீனை பிடித்தால், ஆடுகளை வெட்டினால் கொலை இல்லை,காரணம் இவைகளுக்கு ஆன்மா இல்லை ,மருத்துவர் ஊசி போட்டால் கிருமிகள் சாகும் ,விவசாயி பயிர்களில் பூச்சி மருந்து அடித்தால் பூச்சிகள் சாகும் அதனால் , இவர்கள் எல்லாம் கொலையாளிகளா இல்லையே, காரணம் இவைகளுக்கு ஆன்மா இல்லை,
எனவே ஆலயங்களில் ஆடு ,கோழி ,ஆத்தி( பன்றி) இவைகளை படைப்பது பலியாகாது ,ஆண்டவன் விரும்பும் பொருள்கள்தான் ,இதில் தவறு ஒன்றுமில்லை , என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
சேர்மன் அருணாச்ச சுவாமி Sri Arunachala Swami
-:செட்டியாபத்து கோவிலும், எரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகளும்:-
திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் மேலப்புதுக்குடியை சேர்ந்த ராமசாமி நாடார் , சிவனைந்த அம்மாள் தம்பதியர் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என வருந்தி ஆத்திசுவாமி கோவிலில் விரதம் இருந்தனர். . விரதமிருந்த தம்பதியரிடம் திருமணியும், தீர்த்தமும் கொடுத்து விரைவில் உங்களுக்கு ஆண்மகன் பிறப்பான், அவனுக்கு அருணாசலம் என பெயர் சூட்டுமாறும், அந்த குழந்தையின் வாழ்வு பற்றியும் அருளினார் ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் இருந்த தவத்திரு வேலாண்டிசுவாமிகள், அதன் பயனாய் பிறந்த குழந்தைதான் ஆடி அமாவாசை அன்று எரலில் சிறப்பாக கொண்டாடப்படும் ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகள், அதன் நினைவாக, ஸ்ரீ சேர்மன் அருணாச்சல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடார் கட்டிகொடுத்ததுதான், ஆத்திசுவாமி கோவிலில் இப்பொழுது உள்ள பள்ளியறை கட்டில் மண்டபம். இங்கு பணிவிடை செய்பவர்களால் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் சந்நியசிகளில் ஒருவர்தான் வேலாண்டி சுவாமிகள் ,அவர் சமாதியான இடம்தான் கோவில் கோட்டை சுவருக்கு வெளியில் கிழக்கு புறம் உள்ள வேலாண்டி சுவாமிகள் மடம்.
Poojai
இக் கோவிலில் பூஜையின் போது மேளம், தாளம், நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் இசைப்பதில்லை, மந்திரங்கள் ஓதுவதில்லை மவுனமாக நடக்கிறது, ஆனால் ஆலயத்தின் மணி மட்டுமே ஒலிக்கிறது, திருவிழாவின் போது சாமி ஊர்வலம் இல்லை, இங்கு சக்தி வழிபாடு தொன்று தொட்டு நடக்கிறது, எனவே பெண்களுக்கு சிறப்பு உரிமை வழங்கப்படுகிறது, பூஜை பொருள்களை பெண்கள் தொட்டு வணங்கிய பிறகு தான் சுவாமிக்கு படைக்கபடுகிறது .
பக்தர்களின் கவனத்திற்கு அறிந்து கொள்ளுங்கள்
மேக்கட்டி பூஜை நடை பெறும் நாட்களான தை 5 ம் தேதியும், சித்திரை மாதம் 18 ம் தேதியும் காதுகுத்து , முடி காணிக்கை அனுமதிக்கப்படுவதில்லை , பணிவிடைகள் தை 5 ம் தேதியும்,சித்திரை 16 ,17 ,18 ம் தேதிகளிலும் அனுமதிக்கப்படுவதில்லை, சித்திரை 23 ம் தேதி அன்னமுத்திரி பூஜை அன்று மாலை 5 மணிக்கு மேல் தான் பணிவிடை அனுமதிக்கப்படுகிறது , தமிழ் மாத கடைசி வெள்ளி கிழமைகளிலும் .திரு கார்த்திகை , தை முதல் தேதி அன்றும் பணிவிடை கிடையாது ,மேற்படி நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பணிவிடைகள் அனுமதிக்கப்படுகிறது
திருமணி Thirumani
இத் திருக்கோவில்லில் பிரசாதமாக வழங்கப்படும் திருமணி சுவாமி அருளால் மிக சக்தி வாய்ந்ததாகவும், உயர்வானதாகவும் விளங்குகிறது, இது வெள்ளை நிற மன்கட்டியை இடித்து பொடியாக்கி தண்ணீர் விட்டு பிசைந்து உருட்டி நன்கு வெயிலில் காயவைத்து ''திருமணி'' தயாரிக்கப்படுகிறது
இதை பக்தர்கள் நெற்றியில் பொட்டுஆகவும் ,மொட்டை எடுத்தபின் தலையில் பூசிக்கொள்ளவும், வியாதி உள்ளவர்கள் தண்ணிரில் கலந்து குடித்தும் குணமடைகிறார்கள், பூஜையின் போது பூசாரியால் பக்தர்களின் நெற்றியில் பொட்டு இடவும் பயண்படுத்துகிறார்கள், திருமணியின் மகிமையினால் பலனடைவதால் பக்தர்கள் தங்கள் குழந்தைக்கு திருமணி என்று பெயர் சூட்டுகிறார்கள் ,இங்கு குங்குமம் ,திருநீறு வழக்கத்தில் இல்லை
அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்
அன்பர்கள் இந்த வலை பதிவை பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை, இந்த வலைபதிவில் கருத்துரைகள் என்பதில் பதிவு செய்ய வேண்டுகிறோம் , அது இந்த வலை பதிவின் தரத்தை வளர்க்க உதவும், மேலும் ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக கொண்டவர்கள் அவசியம் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள், மேலும் உறவுகளுக்கும் இந்த இணையதளத்தை அறிமுகம் செய்திடுங்கள். தங்களுக்கும், தங்களை சார்ந்தோருக்கும் ''ஐந்து வீட்டு சுவாமி '' திருவருள் பரி பூரணமாக கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)