ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
பாதக்கரை சாமி
செட்டியாபத்திலே இருந்து சோலையப்பர் வடக்கு திசை நோக்கி செல்லவேண்டும் என நினைத்தார், தன் எண்ணத்தை குருவிடம் கூறவும், அவர் சீடரின் ஆயுட்காலம் முடிவு நெருங்குவதை உணர்ந்து '' உன் விருப்பபடி செல் '' என்று விடை கொடுத்து அனுப்பினார் குருவின் உத்தரவு கிடைத்தவுடன் மகிழ்ந்து வடக்கு நோக்கி புறப்பட்டார், செல்லும் வழியில் பெரியசாமிகளின் சீடர்களில் ஒருவர் ''நாலுமாவடி'' என்னும் ஊர் அருகில் பாதை கரையில் இயற்க்கை எய்தினார். எனவே அவரை மக்கள் ''பாதக்கரை சாமி'' என்றழைத்து வழிபடுகின்றனர். நாலுமாவடி பாதக்கரை சாமி கோவிலை பார்வையிட http://www.rightplus.blogspot.in/ க்கு செல்லவும்
மெய்சீடர் சோலையப்பசாமிகள்
செட்டியாபத்திலே சுவாமிகள் தங்கயிருந்த போது ஒரு முறை மிகவும் நோய்வாய்ப்பட்டார், அந்த சமயத்தில் தமது சீடர் சோலையப்பரை சோதித்து பார்க்க நினைத்து சுவாமிகள் சோலையப்பர் பார்க்கும்படியாக ''வாந்தி'' எடுத்தார். அதைக்கண்ட சோலையப்பர் தனது இருகைகளால் வாந்தியை ஏந்திக்கொண்டு சுவாமிகளிடம் இதை என்ன செய்யவென்று கேட்க எதையும் புதைக்காத இடத்தில் புதைக்கும்படி கூறினார். ''எதையும் புதைக்காத இடம் '' என்பதை ஒரு கணம் சிந்தனை செய்த சோலையப்பர் அதை அப்படியே குடித்து விட்டார்; சாமிகள் சோலையப்பரின் செயலை எண்ணி எண்ணி வியந்தார், பின்பு ஒருநாள் சுவாமிகள், சோலையப்பரிடம் ''வெற்றிலை இடித்து வா'' என கூற வெற்றிலை இடிக்கும் உரல் எங்கு தேடியும் கிடைக்காததால், நேரமாகி கொண்டிருந்ததாலும் சோலையப்பர் தனது வாயில் போட்டு மென்று உரலில் இடித்தது போல் சுவாமிகளிடம் கொடுத்தார், பெற்றுக்கொண்டு வாயில் போட்டு தின்ற சாமிகள் என்றுமில்லாத அளவுக்கு ருசியாய் இருக்க கண்டு ''இடித்த உரலை கொண்டு வா'' என்றார். இதை கேட்ட சோலையப்பர் செய்வதறியாது திகைத்தார். மறுகணம் தன தலையை கொய்து ''இதோ அந்த உரல் '' என கொடுத்தார்.அதைக்கண்டு அதிர்ந்த சாமிகள் தம்மிடம் கற்ற வித்தையை தன்னிடமே காட்டுகிறானே என மனதில் கொண்டு, ''அற்றதலை அப்படியே பொருந்தட்டும்'' என்று சுவாமிகள் கூறவும்.தலை அப்படியே போருந்திக்கொண்டது.
தலை பொருந்தியதை கண்ட சாமிகள் மனதில் கோபம் குறையாது என்னிடம் கற்ற வித்தையை என்னிடமே காட்டியதால் நீ செல்லும் வழியில் நிலம் வெடிப்போடு உள்ள இடத்தில் நீ சிரம் வெடித்து இறப்பாய் என சாபமிட்டார். உண்மை என்னவென்று தெரியாது சுவாமிகள் சாபமிட்டு விட்டாரே என கலங்கி கோபமுற்ற சோலையப்பர் குரு என்றும் பாராது ''நீர் அனாதையாய் இறந்து போவீர்'' என எதிர் சாபமிட்டார்.

பெரிய சுவாமிகளும் அவரின் சீடர் சோலையப்ப சுவாமிகளும்
நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரிலே வைஷ்ணவ பிராமணர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்த காலம்.வைஷ்ணவமே உயர்ந்தது என்று மற்றவர்களை இழிவுபடுத்தி வந்தனர். ( இப்பொழுதும் அப்படித்தான் உள்ளனர் ) அவர்களின் ஆணவத்தை அகற்றவும். அதை விட உயர்ந்த வழிபாடு உள்ளது என்பதை உணரவைக்கவும் சிந்தித்தவாறு சுவாமிகள் தூங்கிவிட்டார்.
அவரின் கனவில் அன்னை தோன்றி ஆழ்வார் திருநகரி சென்று திருப்புளி ஆழ்வாரை காணும் படி கூறினார், அதேவேளையில் ஆழ்வார் திருநகரில் புளியமரத்தடியில் அவதரித்து ''தான் வளர வளர தொட்டிலும் வளரும்படி வரம் பெற்று'' யாரிடமும் பேசாதிருக்கும் திருப்புளி ஆழ்வாரின் கனவில் அன்னை தோன்றி பெரியசாமி வருவதை தெரியப்படுத்தினார்.மறுநாள் காலையில் பெரியசாமிகள் தன தலைமை சீடர் சோலையைப்பருடன் ஆழ்வார் திருநகரி சென்றார்.
அங்கே சில அற்புதங்களை நிகழ்த்த எண்ணிய நம்சுவாமிகள் , அங்கு சிலகாலம் தங்கி வாழை இலை வியாபாரம் செய்தார், வாழை இலை மரத்தில் எடுக்காமல் எச்சில் இலைகளை பொறுக்கி கழுவி விற்று வந்தனர், இவர்களிடம் வாங்கிய இலையில் சாப்பிட்டால் சாப்பாடு மிகவும் ருசியாக இருந்தது எனவே பிரமணர்கள் இவர்களிடம் இலைகள் ஆர்வத்தோடு வாங்கி சென்றார்கள். வியாபாரம் பல மடங்கு பெறுகியது, அதனால் இலைகளை சரிவர கழுவாமல் சுத்தபடுத்தாமல் விற்பனை செய்தனர், அதை தெரிந்து கொண்ட பிரமணர்கள் தாங்கள் இவ்வளவு நாட்களும் எச்சில் இலைகளில் சாப்பிட்டதை உணர்ந்து இலை வாங்குவதை நிறுத்திவிட்டனர் எனவே அந்த திருவிளையாடலை சுவாமிகள் அத்துடன் நிறுத்திக்கொண்டார் .
சில நாட்கள் கழித்து பெரியசாமிகளும் சோலையப்பரும் தாமிரபரணி ஆற்றில் மீன்களை பிடித்து வறுத்து இடித்து ''திருவரங்க பொடி'' என கூறி சாம்பாருக்கு மிகவும் சுவை கூட்டவும்,மணம் கூட்டவும் பயன்படும் என்று விற்று வந்தனர், அதைவாங்கி பயன் படுத்திய பிரமணர்கள் அதை வாங்கி பயன்படுத்தி அதன் ருசியில் திளைத்தனர், வியாபாரம் அமோகமாக பெருகியது. நாளாக நாளாக சாமிகள் மீன்களை சரிவர வறுக்காமலும், இடிக்காமலும் விற்றனர், அதை அறிந்த பிராமணர்கள் தாங்கள் அசைவம் சாப்பிட்டதை உணர்ந்து சாமிகளை விரட்டியடித்தார்கள் .
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், சாமிகள் அமாவாசை அன்று சைவமாகவும் பௌர்ணமி அன்று அசைவமாகவும் பூஜை செய்யும் வழக்கமுடையவர். அன்று பௌர்ணமியாக இருந்ததால் பௌர்ணமி பூஜை செய்ய அருகே இருந்த ஆட்டு மந்தையில் ஆடு ஒன்றை பிடித்து அதற்க்கு பாதப்பால் கொடுத்து அதை அறுத்து சமைத்துக்கொண்டிருந்தார் அதையறிந்த பிராமணர்கள் ஆங்கிலேய ''பிஷப்''பிடம் போய் எங்களது பிராமன அஹ்ரகாரத்தில் அசைவ பூஜை செய்து அதன் புனிதத்தை கெடுக்கிறார் என புகார் கொடுத்தனர். உடனே ''பிஷப் '' சாமிகள் சமையல் செய்யுமிடம் சென்றார் அங்கு அவர் ஆட்டை அறுத்து வைத்திருப்பதை பார்த்து இது என்னவென்று கேட்க சாமிகள் ஆட்டு இறைச்சியை காட்டி இது ''தொசம'' அதாவது வாழைக்காய் துண்டு என்றும் எலும்புகளை காட்டி ''கரண்'' அதாவது முருங்கைக்காய் என்றும், தோலை காட்டி சட்டை என்றும் அதாவது வாழைக்காய் தோல் என்றும் உப்பை சீனி என்றும் அகப்பையை கணக்குபிள்ளை என்றும்,முட்டையை ''அண்டம்'' என்றும் குடலை ''பூசப்பெட்டி'' என்றும், ஒவ்வொன்றுக்கும் மாற்று பெயர்களை கூற அன்னையின் அருளால் அனைத்தும் அப்படியே அந்ததந்த பொருளாக இருக்க கண்டார் ''பிஷப்'' .தன்னை அழைத்து வந்தவர்களை நோக்கி இனிமேல் இது போல் பொய் தகவல் கொடுத்தால் உங்கள் மீது தான் நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி சென்றார், பின்பு பூஜை முழுவதையும் முடித்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
108 முறை மந்திரம் சொல்ல எளியவழி
108 முறை மந்திரம் சரியாக சொல்ல பல முறைகள் உண்டு
1 . மல்லிகை பூ மொட்டுகளை 108 எண்ணி எடுத்துக்கொண்டு பூஜையின் போது ஒவ் வொன்றாக சுவாமிகளின் மேல் பணிவாக போட்டு மந்திரம் சொல்லலாம் ஒரு பூவை போட்டதும் ஒருமுறை மந்திரம் சொல்ல வேண்டும்
2 . 108 ருத்ராட்சம் உள்ள மாலையை கையில் வைத்துக்கொண்டு அடையாள ருத்ராட்சத்திலிருந்து ஒரு ருத்ராட்சத்தை நகர்த்தியதும் ஒருமுறை மந்திரம் சொல்லவேண்டும் பின்பு அடுத்த ருத்ராட்சத்தை நகர்த்தியதும் அடுத்த முறை மந்திரம் சொல்லவேண்டும் இப்படியே 108 முறை சொல்லலாம்
3 . இது மிகவும் எளிய வழி நாம் எங்கிருந்தாலும் மற்ற யாரும் நம்மை கவனிக்காமல் நம் மனதுக்கு மட்டும் தெரியும் படி நாம் மந்திரம் சொல்லி இறை அருள் பெறலாம் 108 முறையும் சரியாக சொல்லலாம்
நமது கை விரல்கள் ஒவ்வோன்றிலும் மூன்று மடக்குகள் உள்ளன,எனவே இடது கையில், சுண்டு விரல் மோதிரவிரல் நடுவிரல் மூன்றையும் தேர்வு செய்து கொள்ளுங்கள், வலது கையில் சுண்டு விரல், மோதிரவிரல், நடுவிரல்,ஆள்காட்டி விரல் நான்கையும் தேர்வு செய்து கொள்ளுங்கள் இப்பொழுது இடது கை மூன்று விரல் மடக்குகள் மொத்தம் ஒன்பது,வலது கை விரல் மடக்குகள் பன்னிரெண்டு ஆக மொத்தம் நூற்றியெட்டு, முதலில் இடது கை சுண்டு விரல் நுனியில் உள்ள முதல் மடக்கில் இது கை பெருவிரல் கொண்டு தொட்டு அடையாளமிட்டு கொள்ளுங்கள்,பின்பு வலக்கை சுண்டுவிரல் நுனியில் வலது கை பெருவிரல் கொண்டு தொட்டு ஒருமுறை மந்திரம் சொல்லுங்கள் அதன் பிறகு வலக்கை சுண்டு விரலில் பெருவிரலை இரண்டாவது மடக்கில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லுங்கள் இப்படியாக நான்கு விரல்களிலும் பன்னிரெண்டு முறை சொல்லிவிட்டு இடது கை சுண்டு விரலில் பெருவிரலை இரண்டாவது மடக்கிற்கு நகர்த்தி அடையாளமிட்டுக்கொள்ளவும் பின்பு வலது கையில் முன்பு போலவே செய்யுங்கள்,இப்படி இடது கை விரல் ஒரு மடக்கிற்கு வலது கைவிரல் பனிரெண்டு மடக்குகள் வீதம் எண்ணுங்கள் 108 சரியாக வரும்

ஹரி ஓம் ராமானுஜாய
திருகார்த்திகை திருவிழா
''திருகார்த்திகை திருவிழா''
இக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருகார்த்திகை உற்சவம் மிகவும் சிறப்பானது, உற்சவ நாளன்று காலை செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்த ஆண்களால், கோயிலுக்கு சொந்தமான வாடல்பனை ஒன்றை வெட்டியெடுத்து முழு மரத்தையும் தலை சுமையாக சுமந்து ஆலயத்திற்கு கொண்டுவந்து நிறுத்தி பனை ஓலைகளால் சொக்கப்பனை கட்டப்படுகிறது, பின்பு தீ இட்டு சொக்கபனை கொளுத்தப்படுகிறது, சொக்கப்பனை எரிநத பின்பு அதிலுள்ள ஆத்தி மர குச்சிகளை பக்தர்கள் எடுத்து தங்கள் வீட்டு கூரையின் மீது போட்டு பலன் அடைகிறார்கள்

கோவில் வரலாறு TEMPLE HISTORY
ஜாதி பேதமில்லாத கோவில்
பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஆலய வழிபாட்டு செலவுகளை பஞ்சபாண்டியர்கள் பகிர்ந்து அளித்ததாக வரலாறு உள்ளது. நாயக்கர்கள் படையெடுப்பின்போது, ஆலயத்தை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர்.
''அன்னதானம்'' வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ''தறி இறை'' எனவும்,வியாபாரிகள் ''அங்காடி பாட்டம்''எனவும், மணப்பாடு, ஆலந்தலை மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும், மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ''இலை கூலம்'' எனவும் ,நங்கை மொழி தேரி-ல் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் "விற்பிடி" எனவும்,ஆடு,மாடு,வளர்த்த குலசகரபட்டினம் கோனார்கள் ''இடைப்பாட்டம்''எனவும்,தென்னை பனை மர
பரமன் குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட
நெசவாளர்கள் ''தறி இறை'' எனவும்,வியாபாரிகள் ''அங்காடி பாட்டம்''எனவும்,
மணப்பாடு, ஆலந்தலை மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும்,
மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த
பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ''இலை கூலம்'' எனவும் ,நங்கை மொழி தேரி-ல்
வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் "விற்பிடி" எனவுங்கள் வைங்த்திருப்போர்கள் "மரவிறை'' எனபரமன்
குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள்
''தறி இறை'' எனவும்,வியாபாரிகள் ''அங்காடி பாட்டம்''எனவும், மணப்பாடு, ஆலந்தலை மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும்,
மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த
பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ''இலை கூலம்'' எனவும் ,
இந்த பொருளாதாரத்தைக்கொண்டு ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது
திருமந்திரம்
'ஹரி ஓம் ராமானுஜாய'
இந்த திருமந்திரத்தை தினசரி ஓதி வந்தால், திருமணத்தடைகள் நீங்கும், நல்லவரன்கள் அமைவார்கள், குழந்தை பாக்கியம் ஏற்படும்,தொழிலில் ஏற்பட்ட தேக்கநிலை சீர்படும்,தொழில் மேன்மையடையும், வேலையாட்கள் தொந்தரவுகள் குறைந்து நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பொருளாதர விரையம் குறையும், நவகிரகங்களினால் ஏற்ப்படும் பாதிப்புகள் நிவர்த்தியாகும், மனோதைரியம் கிடைக்கும், நிம்மதி ஏற்படும் , எடுத்த நல்ல காரியங்கள் சித்தியாகும், எதிரிகள் இல்லாது போவர், காரியதடைகள் நீங்கும், புகழும் கீர்த்தியும் கிட்டும் எதிர்காலம் இனிமையானதாக மாறும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)