Iynthuveetuswamy Temple-Chettiyapathu
ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
கருணை
உன் கவலைதான் என்ன? என்னிடம் கூறிவிடு நானே உனது குரு; என்னையே நினை; என் நாமத்தையே நினை, என்னை வணங்கி என்னிடம் சரணடை அது போதும் உனக்கு.
நீ எதற்கும் பயப்படாதே. நீ ஏன் கவலைபடுகிறாய்? என்னை நீ தஞ்சமடைந்து விட்டாயல்லவா! நான் பார்த்து கொள்கிறேன்.இனி எதற்கும் நீ பயப்பட தேவைஇல்லை. உனது மனம், புத்தி, அகங்காரம் எனும் மூன்றையும் என்னிடம் சமர்ப்பித்துவிடு. இவ்வுலக வாழ்க்கையில் உன் கையில் ஏதுமில்லை.
எல்லாவற்றையும் நானே இயக்குகிறேன் என்ற மனோபாவத்தை ஏற்படுத்திகொள் . எதிலும் அவசரபடாதே பொறுமையாய் இரு. என் மீது உன் பாரத்தை இறக்கு, நான் சுமக்கிறேன. என் மீது முழு நம்பிக்கை வைத்து நீ செய்யும் அனைத்து செயல்களுக்கும் என்னை பொறுப்பாளியாக்கு உன் செயலை உன் விருப்பபடி நான் செய்து முடிக்கிறேன்.
நம்பிக்கை எனும் அச்சாணியாக என்னை உன் மனதில் நிறுத்து.
பொறுமையாய் வாழ்ந்து வா .
உன்னை சேர்ப்பிக்க வேண்டிய இடத்தில் நான் சேர்க்கிறேன்.என்னை சரணடைந்து உன்னை என்னிடம் ஒப்படைத்துவிட்டு என் மீது முழு நம்பிக்கை வை உன் பாரம் மட்டும் அல்ல உன் பாவத்தையும் நான் சுமக்க தயாராக இருக்கிறேன்.
*என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வை…*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)