அருள் தரும் வயணமப் பெருமாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருள் தரும் வயணமப் பெருமாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தலையெழுத்து சீர் செய்யும் வயணப்பெருமாள்

ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலில்
அருளும் வயணப் பெருமாளே!

தவிப்பவர்க்குத் துணையாய் வருபவரே!
உன் பாதம் பணிந்தோம், துணை நீயே!

தலையெழுத்தை சீர் செய்யும் தனிப்பெரும் தெய்வமே,
தலைசிறந்த வயணப் பெருமாளே!

நோய்நொடிகள் தீர்க்கும் நல்ல மருந்தாகி,
நல்வாழ்வு அருளும் நாயகனே!

அடுத்த பிறப்பில்லாமல் அவலங்கள் நீக்கி,
அருள்புரியும் வயணப் பெருமாளே!

கவலைகள் போக்கும் வயணப்பெருமாளே!
உன் திருநாமம் சொல்லி, உன் பாதம் போற்றி,
திருவருள் வேண்டினோம், வயணப் பெருமாளே!!! 

நல்இன்பம் தந்து காத்தருள்வாய் வயணப் பெருமாளே!!!
                ஆத்தியப்பன் S