அருள்தரும் வயணபபெருமாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருள்தரும் வயணபபெருமாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வயணப்பெருமாள் போற்றி



அருள் சுரக்கும் வயணப்பெருமாளே!
அடியார்க்கு என்றும் துணை நிற்பவரே!
ஐந்து வீட்டு சாமியாய் அமர்ந்தவரே,
ஆனந்தம் அருளும் நாயகனே!

நேர் கொண்ட பார்வை நோக்கும் அன்பர்க்கு,
நலமெல்லாம் தந்து காப்பவரே!
நோய்கள் தீர்க்கும் வைத்தியனாய்,
நம்பி நாடி வரும் அனைவருக்கும்!

திருவருள் பொழியும் கருணாமூர்த்தியே,
திருநாமம் செபிப்போர்க்குச் செல்வமே!
மனக் கவலை தீர்க்கும் மருந்து நீரே,
மகிழ்வோடு வாழ வழி காட்டுவீரே!

வயணப்பெருமாள் தாள் பணிவோம்!
வாழ்வினில் இன்பம் பொங்கக் காண்போம்!
ஹரி ஓம் ராமானுஜாய!
திருவருள்தரும் வயணபெருமாள் போற்றி!!!போற்றி!!!