அன்னதானம்

ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் பணிவிடை என்று அன்போடு அழைக்கும் அன்னதானம் தினமும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் இங்கு கூடி, அரிசி உணவை முக்கிய பிரசாதமாக உண்டு பசியாறுகின்றனர்.
​ஒரு காலத்தில் கோயில்களில் ஏழைகளின் பசியைப் போக்க கஞ்சித் தொட்டிகள் இருந்தன. அதே கருணை மனப்பான்மையோடு, ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயிலும் பசிப்பிணி நீக்கும் புண்ணிய ஸ்தலமாகத் திகழ்கிறது. இங்கு அளிக்கப்படும் அன்னதானம் பசியை மட்டும் போக்குவதில்லை, மக்களின் இதர துன்பங்களையும் நீக்குகிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த இனிய நிகழ்வு இத்திருக்கோயிலின் பெருமைகளுள் ஒன்றாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: