பெரியசாமியின் சிறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியசாமியின் சிறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கண்டார் பெரியசாமியை


கண்டார் பெரியசாமி நடந்து வர கண்டார்,

பெரியசாமி நடந்து வரும்போது,
தலைக்கு மேலே வேஷ்டி நிழலாய் பறக்குதாம்!

வேஷ்டியின் நிழலில், வெயிலுமில்லை வெப்பமுமில்லை,
குளு காற்றும், மன அமைதியும்!

நடந்தாரே பெரியசாமி, நடந்தாரே!
செட்டியாபத்து நோக்கி நடந்தாரே!

வேஷ்டியின் நிழல் அவரைத் தொடர,
தெய்வ சக்தி கூடவே வர!
சோலையப்பர் கண்டார், பரவசமடைந்தார்,
பெரியசாமியின் மகிமையை உணர்ந்தார்!

துண்டு வேஷ்டியல்ல அது, தெய்வீக சக்தி,
அவர் மேல் பொழியும் அருட்காட்சி!

பெரியசாமியின் நடையில் பேரொளி,
நிழலாய் வரும் வேஷ்டியில் பெருஞ்சக்தி!

இப்படி ஒரு காட்சி கண்டார்,
பேரின்பத்தில் திளைத்தார்!

 பின் தொடர்ந்தார் பெரியசாமியை பின் தொடர்ந்தார் சோலையப்பர் தானே!!!
       ஆத்தியப்பன் S