சித்திரை தை மாத திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்திரை தை மாத திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முக்கிய திருவிழாக்கள்

சித்திரைப் பூஜை மற்றும் தைப்பூசத் திருவிழாக்கள்
​அருள்மிகு பெரிய சுவாமி, பெரியபிராட்டி, ஆத்திசுவாமி, திருபுளி ஆழ்வார் கோயில்கள் ஸ்தாபிதம் செய்த நாளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 6 நாட்கள் சித்திரைப் பூஜை திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
​அதைப் போலவே வயணப் பெருமாள், அனந்தம்மாள் கோவில்கள் ஸ்தாபிதம் செய்த நாளைப் போற்றும் வகையில் தை மாதம் 5-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திருவிழாவின் இறுதி நாள் வழங்கப்படும் அன்னமுத்திரைப் பிரசாதம் மிகவும் மகிமையுள்ளதாகக் கருதப்படுகிறது.
​இத்திருக்கோயிலில் பூஜைகளும், வழிபாடுகளும் மௌனமாகக் நடைபெறுகின்றன. பூஜையின்போது மேளம், நாதஸ்வரம் போன்ற எந்த இசைக்கருவியும் இசைப்பதில்லை. திருவிழாக்களின்போது சுவாமி புறப்பாடு நடைபெறுவதும் இல்லை. இங்கு சக்தி வழிபாடு தொன்றுதொட்டு நடைபெற்று வருவதால் பெண்களுக்கு சிறப்புரிமை வழங்கப்படுகிறது. பூஜைக்குரிய சாமான்கள் பெண்களால் தொண்டு வணங்கிய பிறகே சுவாமிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. தைப்பூசை மற்றும் சித்திரைப் பூசை திருவிழாக்களின்போது ஏராளமான மக்கள் வந்து சுவாமியின் அருள் பெற்றுச் செல்கின்றனர்.