யாத்திரை

உறவுகளே!!!
எனக்கு பல காலமாக ஒரு யோசனை உண்டு. நமது குலதெய்வம் பெரிய சுவாமிகள் பல ஊர்களுக்கு சென்று பல இடங்களில் தங்கி பூஜைகள் செய்து சீடர்களுடன் அந்த ஊர் மக்களுக்கும் சூட்சும பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார். அப்போது அங்கு வந்தவர்களுக்கு அசைவ விருந்து படைத்திருக்கிறார், அதை நினைவூட்டு விதமாக பெரிய சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றில் பங்குபெறும் இடங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து சுமார் ஒரு 40, 50 கிலோ மீட்டர்கள் ஆண்டு தோறும் ஏதேனும் ஒரு நாளில் பாதயாத்திரை துவங்கி நமது செட்டியாபத்து கோவிலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் ஏதேனும் செய்து சிறப்பித்தால் நமது கோவில் மிகவும் பிரபலமாகும் நமது குருவின் நோக்கமும் மக்களை சென்றடையும் யாத்திரையின் போது தங்குமிடங்களில் மற்ற கோவில்களுக்கு மாலை அணிந்து செல்வது போல் செல்ல வேண்டியது இல்லை. சைவ உணவுகள் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை நாமும் சில இடங்களில் பெரியசாமிகள் செய்தது போல் அசைவ உணவுகளை படைத்து யாத்திரை சென்றால், பாதயாத்திரை என்றாலே சைவ உணவு தான் சாப்பிட வேண்டும் விரதம் தான் இருக்க வேண்டும் என்பதை முறியடித்து, நமது குரு குலதெய்வம் செய்து காட்டியது போல் எந்த வகை உணவும் கடவுளை அடைய எந்தவித தடையும் செய்வதில்லை, எந்த வகை உணவு சாப்பிடுபவர்களாலும் கடவுளை அடைய முடியும் என்பதை உலகுக்கு மீண்டும் செய்து காட்டிவிட முடியும், என்று நான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன் இதை செய்யும் வாய்ப்புகள் ஏதேனும் இருக்குமா என்று சொல்லுங்கள்...
அன்புடன் ஆத்தியப்பன்  S

நவராத்திரி

நவராத்திரி

நமது திருக்கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை பூஜை 09.10.2026 அன்று இரவு 10.00 மணிக்கு மேல் தொடங்கி நடைபெறும் மற்றும் நவராத்திரி காப்பு கட்டுதல் பூஜை 10.10.2026 அன்று காலை 08.30 மணிக்கும் நவராத்திரி பூஜை அன்று இரவு 09.00 மணிக்கும் தொடங்கி நடைபெறும். மேற்படி நவராத்திரி தினங்களில் பணிவிடை பூஜை இரவு நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். மேற்படி 10.10.2026 முதல் 19.10.2026 முடிய நடைபெறும் நவராத்திரி பூஜை இரவு 09.00 மணிக்கு தொடங்கி நடைபெறும். மேற்படி தினங்களில் பணிவிடை செய்ய விரும்பும் அன்பர்களுக்கு மாலை 03.30 மணிக்கு பாதப்பால் வழங்கப்படும்.

வேறு வழிபாட்டு முறை

ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக கொண்டவர்கள் வேறு தெய்வங்களை வணங்கலாமா...

 வணங்கலாம் தவறு ஏதும் இல்லை. ஆனால் முன் காலத்தில் நமது பெரியசாமிகள் கடவுளை அடையும் ரகசியங்கள் அனைத்தையும் சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை அண்ணாவியாக நியமித்து அவர்கள் மற்றவர்களுக்கு அந்த இரகசியங்களை சொல்லிக் கொடுக்கும்படி செய்தார். அதனால் நமது கோவிலில் பரம்பரை பரம்பரையாக கடவுளை அடையும் ரகசியத்தை சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்ததனால் ஆன்மீகத்தின் முழு உண்மையையும் புரிந்தவர்களால் வேறு எந்த தெய்வத்தையும் வழிபட இயலாது போனது, ஆகையால் நமது குல தெய்வத்தை வழிபடுபவர்கள் வேறு தெய்வங்களின் கோவில்களுக்கு வழிபட செல்வதில் விருப்பங்கள் குறைந்து நமது கோவிலுக்கு மட்டுமே சென்று வந்தார்கள். எனவே நமது குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்கள் வேறு கோவிலுக்கு செல்ல மாட்டார்கள் என்று திரிந்துவிட்டது, ஆனால் அந்த வழக்கம் தற்போது இல்லாமல் போய்விட்டது ஆகவே வேறு கோவிலுக்கு வழிபடச் செல்வதனால் தவறு ஏதும் இல்லை. ஆனால் நாம் திருமணிமாலை, திருமணிக்கோவை, மனோன்மணி அகவல், மனோன்மணி மாலை, அனந்தம்மாள் தசப்பபதிகம் போன்றவைகளை படித்து அதன் முழு பொருளும் புரிந்தால் நமக்கும் வேறு தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு இருக்காது உறவுகள் விரும்பினால் ஒரு ஒப்புக்காக நீங்களும் வேறு கோவில்களுக்கு சென்று வருவீர்கள் அவ்வளவுதான் ஆனால் மனது வேறு தெய்வங்களின் மீது ஈடுபாடு கொள்ளாது...

கோத்திரம்

கோத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட ரிஷியின் (முனிவரின்) நேரடி தந்தை வழி வாரிசுகளைக் குறிக்கும் அடையாளமாகும்.
​இதை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள சில முக்கியக் குறிப்புகள்:

​1. ஒரு ரிஷியின் குடும்பம்
​ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகளின் வம்சாவளியினர்.  உதாரணமாக நாம் ஒருவருக்கு அதாவது "உத்ர மகரிஷி கோத்திரம்" என்றால், உத்ர மகரிஷியை தந்தையாக கொணட வழி பரம்பரையில் வந்தவர் என்று பொருள்.

​2. ரத்த உறவு (Biological Connection)
​கோத்திரம் என்பது அடிப்படையில் ஒரு "மரபணு வழித்தடம்" (Genetic Lineage).
​ஒரு தந்தைக்குப் பிறக்கும் மகன்களுக்கும், மகள்களுக்கும் அதே கோத்திரம்தான்.
​ஆனால், ஒரு பெண் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவர் கணவரின் கோத்திரத்திற்கு மாறிவிடுவார்.
​மகன்கள் மூலமாகவே அந்தக் கோத்திரம் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும்.

​3. ஏன் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்கூடாது?
​ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் "பங்காளி" அல்லது "சகோதர-சகோதரி" உறவுமுறை உடையவர்கள் எனக் கருதப்படுகிறது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒரே ரத்த ஓட்டம் அல்லது நெருங்கிய மரபணு (DNA) கொண்டவர்கள் திருமணம் செய்துகொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையே நம் முன்னோர்கள் "சகோதர உறவு" என்று தவிர்த்தார்கள்.

​4. ​கோத்திரம் என்பது ஒரு ரிஷியைக் குறித்தால். இது உங்கள் அடையாளத்தை இன்னும் துல்லியமாக உறுதிப்படுத்துகிறது.
​சுருக்கமாகச் சொன்னால்:
கோத்திரம் என்பது உங்களின் "ஆன்மீக மற்றும் உயிரியல் முகவரி". உங்கள் முன்னோர்களின் பெயரைக் காக்கும் ஒரு சங்கிலித் தொடர்.
 இது நமது குல தெய்வமான ஐந்து வீட்டு சுவாமிகள் வழிபாட்டில் இல்லை. நாம் பலரும் பல சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வணங்கி வருகிறோம் ஆகவே நாம் எந்த கோத்திரத்தையும் சார்ந்தவர்கள் இல்லை...
ஆத்தியப்பன் S

சுவாமி

ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் அரசாளும் பெரியசாமியே!

உள்ளம் உருகிடுதே உன் பேரைக் கேட்கையிலே!

உள்ளம் உருகிடுதே, உன் பேரைக் கேட்கையிலே!

அண்டினோர்க்கு அபயம் தரும் ஐயனே!
உந்தன் திருக்காட்சியில்
எந்தன் நெஞ்சம் நிறைகிறதே


சந்தம் பாடியே, சந்நிதி முன் வந்தேனே;

சந்தம் பாடியே, சந்நிதி முன் வந்தேனே;

அன்பால் அணைக்கின்றாய், அருள்மழை பொழிகின்றாய்;

எம் குறை தீர்த்திடும் எங்கள் பெரியசாமி!

நானிலம் போற்றிடும் நாயகன் நீயே!

பலவழி கடந்து வந்த காரிய சித்தனே!

பக்தர்கள் துயர்தீர்க்கும் பரம்பொருளே!
 என்றென்றும் எம்மை காத்திடுவாயே!!!
ஆத்தியப்பன் S

அண்டமெலாம்

அண்டமெலாம் ஆளும் சக்தி, அனல் மூச்சில் உறைந்ததே!!!

பிண்டத்துள் கோடி ரகசியம், பிரம்ம நாடி சிறந்ததே!!!

கண்டறிய மூல நாடி, கனல் எழுப்பும் குண்டலி!!!

விண்டதெல்லாம் பொய்மையடா, விழி மூடி உணர்ந்திடு!!!

ஏழாதார சக்கரம், ஆதிசக்தி நிலையமே!!!

ஊறும் அமுதம் உயர, உயிர் நாடி துணையே!!!

பேறும் பெருமை வேண்டாமே, பேரின்ப சுகந்தனை!!!

தேறும் ஞானம் சித்தியடா, தெய்வமாய் ஒளிர்ந்திடு!!! 
ஆத்தியப்பன் S

தை திருவிழா 2026