ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருபுளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி
ஐந்து வீட்டு சுவாமிகள்
ஹரி ஓம் ராமானுஜாய
குரு ராமானுஜர் வைஷ்ணவ ஆச்சார்யர் ஆவார். அவருடைய போதனைகள் பெரும்பாலும் விஷ்ணு மற்றும் ஆழ்வார்கள் குறித்தே இருக்கும். ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் பெரியசாமி சங்கு, சக்கரம் ஏந்தி அருள்பாலிப்பதால், அது விஷ்ணுவின் அம்சமாக கருதப்படலாம். இந்த ஒரு ஒற்றுமை தவிர, ராமானுஜர் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டதாகவோ, இந்த கோயிலை நிறுவியதாகவோ, அல்லது இந்த மந்திரத்தை இந்த கோயிலுக்காக உபதேசித்ததாகவோ எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. பெரியசாமிகளின் கருவறையில் விஷ்ணுவின் சிலை கூட கி. பி1955 வாக்கில்தான் நிறுவப்பட்டது.
எனவே, 'ஹரி ஓம் ராமானுஜாய' என்ற மந்திரம் ராமானுஜரின் நாமத்தைக் கொண்டிருந்தாலும், செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலுக்கும் ராமானுஜருக்கும் எந்த விதமான தொடர்புகளும் இல்லை. எனவே இது பிற்காலத்தில் கோயிலின் வழிபாட்டு முறையில் சேர்க்கப்பட்ட ஒரு மந்திரமாக இருக்கலாம். என்பது எனது தீர்க்கமான கருத்து
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






