காலமெல்லாம் காக்கும் கருணையே,

காலமெலாம் எங்களை காக்கும் கருணையே,
கண் கண்ட தெய்வமாய் காட்சி தருபவனே!!!

மறைபொருள் அறிந்த மாபெரும் சித்தனே,

மாயங்கள் நீக்கிடும் எங்கள் பெரியசாமியே!!!

 யோக சக்தியால் உலகை ரட்சிப்பவனே,
என் உள்ளிருந்து அருள் தரும் உத்தமனே!!!

தீயவை நீக்கி, நல்வழி காட்டுபவனே,
திருவருள் புரியும் எங்கள் பெரியசாமியே!!!

 மன நோய் அகற்றி, உடல் பிணி தீர்ப்பவனே,
 தன் சக்தியால் 
பில்லி சூனியம் போகச் செய்பவனே,
பக்தர் தம் துணையாகும் பெரியசாமியே!!!

கல்லுருவாய் நின்று காப்பவனே,
காலமெல்லாம் நின்று அருள் செய்பவனே!!!

மங்காப் புகழோனே, மாபெரும் ஞானியே,
மன அமைதி தரும் பெரியசாமியே!!!

வேண்டுவோர் வேண்டிய யாவும் தருபவனே,
வேண்டாமலே அருள் மழை பொழிபவனே!!!

பக்தனின் துயர் போக்கி ஆறுதல் தந்து,
அற்புதங்கள் செய்யும் பெரியசாமியே!!!

 அகிலமெல்லாம் ஆளும் பெரியசாமியே,
அகந்தை நீக்கிடும் அன்புருவானவனே!!!

வாழ்வில் வசந்தம் தரும் குருவே,
வழி காட்டிடும் எங்கள் பெரியசாமியே!!!

 ஐந்து வீட்டு சாமி அரசவையின் தலைவனே,
ஐயமில்லா வாழ்வை அருள் செய்பவனே!!!

நேரடி தெய்வமாய் நேசம் காட்டுபவனே,
 எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் பெரியசாமியே!

 எங்கள் உயிர் உணர்வில் கலந்திருக்கும் தெய்வமே,
உயர் புகழ் கொண்ட பெரியசாமியே!!!

#செட்டியாபத்து பெரியசாமிகளின் பாடல் இது,

இப்பாடல் பக்தியுடன் ஓதுபவர் எவர்க்கும்,
பெரியசாமிகளின் பரிபூரண அருள் கிட்டும்.
                ஆத்தியப்பன் S