Aathiswamy Kovil

                                          -: ஆன்மா உயிர்  விளக்கம் :-
                                            
    ஓர் அறிவு உள்ள மண்ணுக்கு உயிர் உண்டு , இரண்டு அறிவு உள்ள மரம் செடி கொடிகளுக்கு உயிர் உண்டு,   மூன்று   அறிவு   உள்ள    ஊர்ந்து செல்லும் ஜந்துக்களுக்கு உயிர் உண்டு, நாலறிவு கொண்ட மிருகங்களுக்கு உயிர் உண்டு,   ஐந்தறிவு   கொண்ட பறவைகளுக்கு   உயிர்   உண்டு,   ஆனால், அவைகளுக்கு, ஆன்மா இல்லை,  ஆறறிவு கொண்ட மனிதனுக்கு மட்டும்தான் ஆன்மா உண்டு.
             மண்ணை தோண்டினால், மரத்தை வெட்டினால் ,மீனை   பிடித்தால், ஆடுகளை வெட்டினால் கொலை இல்லை,காரணம் இவைகளுக்கு ஆன்மா இல்லை ,மருத்துவர் ஊசி போட்டால் கிருமிகள் சாகும் ,விவசாயி  பயிர்களில் பூச்சி மருந்து அடித்தால் பூச்சிகள் சாகும் அதனால் , இவர்கள்  எல்லாம் கொலையாளிகளா  இல்லையே,  காரணம் இவைகளுக்கு ஆன்மா இல்லை,
 எனவே ஆலயங்களில் ஆடு ,கோழி ,ஆத்தி( பன்றி) இவைகளை படைப்பது பலியாகாது ,ஆண்டவன் விரும்பும் பொருள்கள்தான் ,இதில் தவறு ஒன்றுமில்லை , என்பது  பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சேர்மன் அருணாச்ச சுவாமி Sri Arunachala Swami

-:செட்டியாபத்து கோவிலும், எரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகளும்:-



திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் மேலப்புதுக்குடியை சேர்ந்த ராமசாமி நாடார் , சிவனைந்த அம்மாள் தம்பதியர் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என வருந்தி ஆத்திசுவாமி கோவிலில் விரதம் இருந்தனர். .   விரதமிருந்த தம்பதியரிடம் திருமணியும், தீர்த்தமும் கொடுத்து விரைவில் உங்களுக்கு ஆண்மகன் பிறப்பான், அவனுக்கு அருணாசலம் என பெயர் சூட்டுமாறும், அந்த குழந்தையின் வாழ்வு பற்றியும் அருளினார் ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் இருந்த தவத்திரு வேலாண்டிசுவாமிகள், அதன் பயனாய் பிறந்த குழந்தைதான் ஆடி அமாவாசை அன்று எரலில் சிறப்பாக கொண்டாடப்படும்  ஏரல் சேர்மன் அருணாச்சல  சுவாமிகள்,  அதன் நினைவாக,  ஸ்ரீ சேர்மன் அருணாச்சல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடார் கட்டிகொடுத்ததுதான், ஆத்திசுவாமி கோவிலில் இப்பொழுது உள்ள பள்ளியறை  கட்டில்  மண்டபம். இங்கு பணிவிடை செய்பவர்களால் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் சந்நியசிகளில் ஒருவர்தான் வேலாண்டி சுவாமிகள் ,அவர் சமாதியான இடம்தான் கோவில் கோட்டை சுவருக்கு வெளியில்  கிழக்கு புறம் உள்ள வேலாண்டி சுவாமிகள் மடம்.



Poojai

  இக் கோவிலில் பூஜையின் போது மேளம், தாளம், நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் இசைப்பதில்லை,  மந்திரங்கள் ஓதுவதில்லை          மவுனமாக நடக்கிறது, ஆனால் ஆலயத்தின் மணி மட்டுமே ஒலிக்கிறது, திருவிழாவின் போது சாமி ஊர்வலம் இல்லை, இங்கு சக்தி வழிபாடு தொன்று தொட்டு நடக்கிறது, எனவே பெண்களுக்கு சிறப்பு உரிமை வழங்கப்படுகிறது, பூஜை பொருள்களை பெண்கள் தொட்டு வணங்கிய பிறகு தான் சுவாமிக்கு படைக்கபடுகிறது .

Thai Thiruvilaa

                                                     ​ -:தை திருவிழா:- 
                                          
  அருள் மிகு வயனப்பெருமாள்,  அனந்தம்மாள் கோவில்கள் ஸ்தாபிதம் செய்த நாளை கொண்டாடும் வகையாக தை மாதம் 5 ம் தேதி தொடங்கி முதல் மூன்று நாட்கள் தை பூஜை திருவிழா நடைபெறுகிறது

Chitthirai Thiruvilaa

                                                 சித்திரை திருவிழா
                                    
அருள் மிகு பெரியசுவாமி,  ஆத்திசுவாமி,  பெரியபிராட்டி,  திருப்புளி ஆழ்வார் கோவில் ஸ்தாபிதம் செய்த நாளை கொண்டாடும் வகையில் ஆண்டுகள் தோறும் சித்திரை   18 ம் தேதி தொடங்கி 6 நாட்கள் சித்திரை  பூஜை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது

பக்தர்களின் கவனத்திற்கு அறிந்து கொள்ளுங்கள்

         மேக்கட்டி  பூஜை நடை பெறும் நாட்களான தை 5 ம் தேதியும், சித்திரை மாதம் 18 ம் தேதியும் காதுகுத்து , முடி காணிக்கை அனுமதிக்கப்படுவதில்லை , பணிவிடைகள் தை 5 ம் தேதியும்,சித்திரை 16 ,17 ,18      ம் தேதிகளிலும் அனுமதிக்கப்படுவதில்லை, சித்திரை 23 ம் தேதி அன்னமுத்திரி பூஜை  அன்று மாலை 5  மணிக்கு மேல் தான் பணிவிடை அனுமதிக்கப்படுகிறது , தமிழ் மாத கடைசி வெள்ளி கிழமைகளிலும் .திரு கார்த்திகை , தை முதல் தேதி அன்றும் பணிவிடை  கிடையாது ,மேற்படி நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பணிவிடைகள் அனுமதிக்கப்படுகிறது

திருமணி Thirumani

இத் திருக்கோவில்லில்  பிரசாதமாக வழங்கப்படும் திருமணி சுவாமி அருளால் மிக சக்தி வாய்ந்ததாகவும், உயர்வானதாகவும் விளங்குகிறது, இது வெள்ளை நிற மன்கட்டியை இடித்து பொடியாக்கி தண்ணீர் விட்டு பிசைந்து உருட்டி நன்கு வெயிலில் காயவைத்து ''திருமணி'' தயாரிக்கப்படுகிறது 
 இதை  பக்தர்கள் நெற்றியில் பொட்டுஆகவும் ,மொட்டை எடுத்தபின் தலையில் பூசிக்கொள்ளவும், வியாதி உள்ளவர்கள் தண்ணிரில் கலந்து குடித்தும்   குணமடைகிறார்கள்,  பூஜையின் போது பூசாரியால் பக்தர்களின் நெற்றியில் பொட்டு இடவும் பயண்படுத்துகிறார்கள், திருமணியின்  மகிமையினால் பலனடைவதால்  பக்தர்கள் தங்கள் குழந்தைக்கு திருமணி என்று பெயர் சூட்டுகிறார்கள் ,இங்கு குங்குமம் ,திருநீறு வழக்கத்தில் இல்லை

ஆத்தி மரம் Aathi Tree

                                              ஆத்தி மரத்தின் மகிமை 
                                     
தீராத வியாதி உள்ளவர்கள் இத் திருத்தலத்தில் தங்கி, ஆத்திமர இலைகளை  அரைத்து தண்ணிரில் கலந்து குடித்து,ஆத்திசுவாமி  அருள் பெற்று குணமாகிச் செல்வது நடைபெறுகிறது ....

அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

    அன்பர்கள் இந்த வலை பதிவை பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை, இந்த வலைபதிவில் கருத்துரைகள் என்பதில் பதிவு செய்ய வேண்டுகிறோம் , அது இந்த வலை பதிவின் தரத்தை வளர்க்க உதவும், மேலும் ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக கொண்டவர்கள் அவசியம் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள், மேலும் உறவுகளுக்கும் இந்த இணையதளத்தை அறிமுகம் செய்திடுங்கள். தங்களுக்கும், தங்களை சார்ந்தோருக்கும் ''ஐந்து வீட்டு சுவாமி '' திருவருள் பரி பூரணமாக கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறோம்.

Aathiswamy Temple

குழந்தை வரம் தந்த குலதெய்வத்திற்கு, முடி காணிக்கை கொடுத்து, காது குத்தி கொள்கிறார்கள்

Aathiswamy Temple

நிம்மதி தரும் திருத்தலத்தின்,  ஒரு பகுதியின்  எழில் மிகு தோற்றம்

Sri Periyaswamy

அருள் மிகு பெரியசுவாமியின் சயன கட்டில்,  இந்த இடத்தின் அருகில் பணிவிடை பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த மண்டபம் ஏரல் அருணாசல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடாரால் கட்டி கொடுக்கப்பட்டது.

Sri Periyaswamy Pooja

  எல்லா தெய்வ சன்னதியிலும்   கடவுளுக்கு அடுத்த நிலையில் பூசாரிகளுக்கு மரியாதையை கொடுக்கபடுகிறது, பக்தர்கள் தெய்வ   திரு உருவை நெருங்க முடியாது, ஆனால் இங்கு கடவுளை தொட்டு வணங்கலாம்,  வணங்கும் போது பூசாரிகளும் (அண்ணாவி) பக்தர்களுடன் நின்று பூஜை செய்கிறார்கள்  இது கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை குறிக்கிறது,  இத் திருக் கோவிலின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே மிகவும் உன்னதமான இருந்து  உள்ளது , இந்தக்கோவில் தெய்வங்களை  நம் குல தெய்வமாக அடைய பெற்றதற்கு நாம் பெருமை கொள்ளுவோம்,
                                        ஹரி ஓம் ராமானுஜாய 
                                        ஹரி ஓம் ராமானுஜாய
                                        ஹரி ஓம் ராமானுஜாய...................

HINDU + ISLAAM= Aathiswamy Temple

    இத்திருத்தலத்தில் இஸ்லாமியர்களை போன்ற பழக்க வழக்கங்களும் கடைபிடிக்கபடுகின்றன, முஸ்லிம்கள் ''பாத்தியா''  ஓதாமல் ஆட்டு கிடாயகளை  பலி இடுவதில்லை, அதை போலவே  இங்கும் பணிவிடைக்காக கொண்டு வரும் கால்நடைகளின் காதுகளில் மந்திரம் ஓதி பாதப்பால் கொடுக்கப்பட்ட பின்னர்தான் பணிவிடைக்கு ஆயத்தமாக்கபடுகின்றன,  இக் கோவில் பாதப்பால்  கொடுக்காமல் செய்யப்படும் பணிவிடைகள், கோவிலில் பாதப்பால் கொடுத்தும் கோட்டைக்கு வெளியில் வைத்து தயார் செய்யப்பட்டவைகளும்  பணிவிடை பூஜைக்கு அனுமதிக்க படுவதில்லை

Meakkatti Pooja

                              மேக்கட்டி பூஜை வரலாறு 
                                              ,,,,,,,,,
பெரியசுவாமிகள் தான் வெளியில்     செல்கையில் துண்டு வேட்டி ஒன்று விரித்தார்போன்று , பெரியசுவாமின் தலைக்கு மேலே பறந்து நிழல் கொடுத்துக்கொண்டு செல்லும் ,மேலே சூரியனைகட்டியதால், ''மேல்கட்டி '' என்ற சொல் நாளடைவில் மேக்கட்டியானது .   இதை நினைவு கூறும் முகமாக சித்திரை திருவிழா, தை திருவிழாவின் போது மேக்கட்டி கட்டுகின்றோம்

தோக்க பணிவிடை Thokka Banividai

                              
               
                                            

கோவில் முகவரி (TEMPLE ADDRESS),

                                 IYNTHUVEETU SWAMY THIRUKKOVIL
                                 CHETTIYAPATHU- 628 203
                                 THIRUCHENTHUR- TALUK
                                 THOOTHUKUDI- DISTRIC
                                  TAMILNADU-- INDIA
                                  PHONE-04639-250630
                                  

Arulmiku Aathiswamy

ஆத்திசுவாமிக்கு, காணிக்கையாக  புதிய செருப்புகள் வழங்கப்படுகின்றன ஆனால் சில நாட்கள் கழித்து அவைகளை  யாரும் பயண்படுத்தாமலே பயண்படுத்தியது போலவும்  கால் தடமும் உள்ளதாகிவிடுகிறது இந்த அதிசயம் ஆத்திசுவாமி அருளால் நடைபெருகிறது, இதை ஆத்தி சுவாமி பயன்படுத்துகிறார் என நம்பும்படியாக இருக்கிறது  

Sri Periyapratti


Sri Aathiswamy


ஆத்திசுவாமிக்கு, செருப்புகள் நேர்த்தி கடனாக செலுத்தப்படுகின்றன. இந்த வழக்கம் உலகில் வேறு எந்த திருத்தலத்திலும் கிடையாது.

Mandabam






Sri Kuthirai Swamy



       குதிரை ஆத்திசுவாமியின் வாகனமாக உள்ளதால் குதிரையும் பக்தர்களால் வணங்கப்படுகிறது.
  ஆத்திசுவாமி தன்பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றவும், துன்பத்திலிருந்து காக்கவும் குதிரை வாகனம் ஏறி வந்து காத்தருளுகிறார்.

கோயில்மண்டபம் (Mandabam)







இத் திருத்தலத்தின் கிழக்கு வாசலில் உள் நுழையும் போது தென்படும் மண்டபவங்களின் எழில்மிகு தோற்றம்

Sri Aanjaneayar

                              திருத்தலங்களில் சங்குசக்கரதாரியின் முன்னோடியாக கருடாழ்வார்தான் இருப்பார் ஆனால் இத் திருத்தலத்தில் மட்டும திருமாலின் முன் முன்னோடி கடவுளாக ஆஞ்சநேயர் எழுந்தருளி இருப்பது அபூர்வமான  விஷயமாகும்.

Sri Aanjaneayar



ஆத்திசுவாமி

ஆத்திசுவாமி அற்புதங்கள் 
-----------------------
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பழனியப்பபுரம் கிராமத்தில் பக்தர் ஒருவரால் ஆத்திசுவாமிக்கு நேர்ச்சையாக விடப்பட்ட ஆட்டுகிடாய் ஒன்று அருகில் உள்ள வேற்று மதத்தினர் ஒருவரின் தோட்டத்தில் மேய, அதனை கோவில் கிடா என்றும் பாராமல் தடியால் அடிக்க, கிடாய்க்கு சொந்தக்காரர், அடித்த நபர் தெய்வ நிந்தனைக்கு ஆட்பட்டு விடக்குடாது என்று கருதி ஆத்திசசுவாமி கோயில் கிடாய் என்று கூற, தோட்டக்காரர் உடனே  ஆத்திசுவாமி கிடாய்க்கு என்ன?  மூன்று கொம்புகளா என அகங்காரமாக கேட்க,  ஆத்திசுவாமி அருளால் உடனே அந்த  கிடாய்க்கு அன்றிலிருது மூன்றவதாக ஒரு கொம்பும் முளைத்த அதிசயம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததும், அந்த கிடாய் கோவில் பணிவிடைக்கு கொண்டுவரப்பட்டதும் மெய் சிலிர்க்க வைத்த நிகழ்ச்சியாகும்.
       ஆட்டுகிடாய் மேல் விழுந்த அடி ஆத்திசுவாமி மேல் விழுந்த அடியாக நினைத்து பதறிய பக்தருக்கு,  நான் உன்னுடன இருக்கிறேன் என்பதை  உணர்த்தவும், அகங்காரமாக பெசியவனின் மமதையை அடக்கவும் இந்த அற்புதம் நிகழ்நதுள்ளது.
             இதனால் நாம் முழு மனதோடு ஆத்திசுவாமி மேல் நம்பிக்கை வைத்தால் அவர் நம்முடன் இருந்து நம்மை காத்து வழி நடத்துவார் என்பது தெளிவாகிறது .

SRI VAYANAPPERUMAAL




அருள்மிகு வயனப்பெருமாள் சுவாமியின் கருணை மிகு தோற்றம் 

SRI PERIYAPRATTI AMBAAL








ஸ்ரீ பெரியபிராட்டி அம்பாளின் பல தரிசனங்கள்

HALL


பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் மண்டபவங்கள்

வடக்கு கோபுரம் North Tower

வடக்கு வாசல் உள் கோபுரம்