ஒவ்வொரு வருடமும் சித்திரை 17 ந் தேதி கஞ்சி பூஜை நடைபெறுகிறது, இந்த கஞ்சி பதநீர் கலந்து தயாரிக்கப்படும் கஞ்சி சோறு ஆகும், கஞ்சி பூஜை முடிந்தவுடன் ''பதநிகஞ்சி'' எல்லோருக்கும் வழங்கப்படும். ஐந்து வீட்டு சாமிகளின் அருள் கலந்து கிடைக்கும் பதநி கஞ்சியின மணமும் சுவையும் அபாரம்.
ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
பொதுவான பூஜை நடைமுறைகள்
ஒவ்வொரு தமிழ் மாத ( மாதாந்திர ) கடைசி வெள்ளிகிழமைகளில் நாள் முழுவதும் பணிவிடைகள் அனுமதியில்லை,
அமாவாசை, பெளர்ணமி, புரட்டாசி மாதம் நவராத்திரி, சித்திரை 23, 24 மற்றும் தை 8 ந் தேதி ஆகிய நாட்களில் இரவு நேரங்களில் மட்டும் பணிவிடைகள் அனுமதிக்கப்படும்.
பாதப்பால் பெறாமல் கோயில் காம்பவுண்ட்டுக்குள் நடையன், மச்சம், கீறி, ஆத்தி பலியிடுதல் சமைத்தல் கூடாது, இது எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது.
தமிழ் வருடபிறப்பு சித்திரை 1 ந் தேதி மற்றும் சித்திரை 16, 17, 18 கார்த்திகை தீப திருநாள், தை 1, 5, பங்குனி 21, மாசி மாதம் சிவராத்திரி ஆகிய நாட்களில் நாள் முழுவதும் பணிவிடைகள் செய்ய அனுமதி கிடையாது.அமாவாசை, பெளர்ணமி, புரட்டாசி மாதம் நவராத்திரி, சித்திரை 23, 24 மற்றும் தை 8 ந் தேதி ஆகிய நாட்களில் இரவு நேரங்களில் மட்டும் பணிவிடைகள் அனுமதிக்கப்படும்.
திருவிழாக்கால நடவடிக்கைகள்
சித்திரை திருவிழா காலத்தில் ஒவ்வொரு வருடமும் சித்திரை 16, 17, 18 ந் தேதிகளில் பணிவிடைகள் செய்ய அனுமதியில்லை.
சித்திரை 18 ந் தேதி மேக்கட்டி பூஜை அன்று மட்டும் பணிவிடையுடன் காது குத்தும், முடிகாணிக்கையும் அனுமதிக்கப்படாது.
சித்திரை 23 ந் தேதி அன்னமுத்திரி பூஜை அன்று பணிவிடைகள் மாலை 5.00 மணிக்கு மேல் தான் அனுமதிக்கப்படும்.
அருள்மிகு ஆத்திசாமி பாதம்
உடல் நிலை, மனநிலை ,ஜாதகத்தில் கிரக நிலை சரியில்லாமல் இருந்தால் அவற்றை சரி செய்ய, ஆத்தி சன்னதி பூஜை நேரத்தில் கோழி முட்டை ஒன்று வாங்கி அண்ணாவியிடம் (பூசாரியிடம்) கொடுத்தால், அவர் அதை நம் தலையை சுற்றி தலைமீது வைத்து மந்திரங்கள் உச்சரித்து அந்த முட்டையை ஆத்திசாமி பாதத்தில் ஒப்படைத்து விடுவார். பின்பு நமது குறைகளை ஆத்திசாமி தீர்த்து விடுகிறார். இது நமது கோவிலில் காலம்காலமாக நடந்து வருகிறது, மக்கள் குறை நீங்கபெறுகிறார்கள்.
ஆத்தி சுவாமியின் தோற்றம் இடது கையில் கதையுடனும், வலது கரத்தில் வீச்சரிவாளுடனும் ( வீச்சு + அரிவாள் )பனையறுப்பு பொங்கல்
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி நடப்பு ஆண்டின் முதல் பனை அறுவடை தொடங்கப்படுகிறது, அன்று செட்டியாபத்து மக்கள் ஊர் கூடி முதலில் பனையறுவடை செய்த ஓலையை பெரியசாமி சன்னதியின் முன் வாழைமரம் கட்டுவதுபோல் கட்டி வணங்கி தங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவவேண்டிக் கொள்கிறார்கள். மேலும் அன்று கோவிலில் பொங்கல் வைத்த பின்பு பொங்கல் வைத்ததை ஊருக்கு அறிவிக்கிறார்கள் அதன் பின்புதான் ஊரில் எல்லோரும் பொங்கல் வைக்கிறர்கள். கோவிலில் பொங்கல் வைக்கும் முன்பு ஊரில் யாரும் பொங்கல் வைப்பதில்லை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)