சப்பரம்

ஒரு காலத்தில் அதாவது சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நமது ஐந்து வீட்டு சுவாமிகள் கோவிலில் இதே போன்று (இதுவல்ல) மரத்தினாலான நான்கு பேர்கள் தூக்கி செல்ல கூடிய சிறு மர சப்பரத்தில் ஆண்டுகள் தோறும் திருவிழாவின் போது செட்டியாபத்தில் நமது சாமிகள் நகர்வலம் வருமாம். (பின் பிரச்சனை காரணமாக நகர்வலம் நின்று போனது) நான் அந்த சப்பரத்தை மட்டும்  சிறு வயதில் பார்த்திருக்கிறேன். அதில் எதை வைத்து நகர்வலம் வந்தார்கள். என்று அறிந்தவர்கள் சொல்லுங்கள். அல்லது விசாரித்து சொல்லுங்கள்... அந்த சப்பரத்தை தற்போது யாராவது பார்த்திருக்கிறீர்களா?  இப்போதும் அந்த சப்பரம் கோவிலில்தான் உள்ளது. முன் காலத்தில் பெரியசாமிகள் கருவறை கிழக்கு வாசல் தற்போது டிக்கெட் கவுண்டர் உள்ள இடத்தில் இருந்தது. தற்போது எந்த  இடத்தில் உள்ளது. சொல்லுங்கள்... 😃
#சப்பரம்

கருத்துகள் இல்லை: