வேறு வழிபாட்டு முறை

ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக கொண்டவர்கள் வேறு தெய்வங்களை வணங்கலாமா...

 வணங்கலாம் தவறு ஏதும் இல்லை. ஆனால் முன் காலத்தில் நமது பெரியசாமிகள் கடவுளை அடையும் ரகசியங்கள் அனைத்தையும் சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை அண்ணாவியாக நியமித்து அவர்கள் மற்றவர்களுக்கு அந்த இரகசியங்களை சொல்லிக் கொடுக்கும்படி செய்தார். அதனால் நமது கோவிலில் பரம்பரை பரம்பரையாக கடவுளை அடையும் ரகசியத்தை சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்ததனால் ஆன்மீகத்தின் முழு உண்மையையும் புரிந்தவர்களால் வேறு எந்த தெய்வத்தையும் வழிபட இயலாது போனது, ஆகையால் நமது குல தெய்வத்தை வழிபடுபவர்கள் வேறு தெய்வங்களின் கோவில்களுக்கு வழிபட செல்வதில் விருப்பங்கள் குறைந்து நமது கோவிலுக்கு மட்டுமே சென்று வந்தார்கள். எனவே நமது குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்கள் வேறு கோவிலுக்கு செல்ல மாட்டார்கள் என்று திரிந்துவிட்டது, ஆனால் அந்த வழக்கம் தற்போது இல்லாமல் போய்விட்டது ஆகவே வேறு கோவிலுக்கு வழிபடச் செல்வதனால் தவறு ஏதும் இல்லை. ஆனால் நாம் திருமணிமாலை, திருமணிக்கோவை, மனோன்மணி அகவல், மனோன்மணி மாலை, அனந்தம்மாள் தசப்பபதிகம் போன்றவைகளை படித்து அதன் முழு பொருளும் புரிந்தால் நமக்கும் வேறு தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு இருக்காது உறவுகள் விரும்பினால் ஒரு ஒப்புக்காக நீங்களும் வேறு கோவில்களுக்கு சென்று வருவீர்கள் அவ்வளவுதான் ஆனால் மனது வேறு தெய்வங்களின் மீது ஈடுபாடு கொள்ளாது...

கருத்துகள் இல்லை: