சுவாமி

ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் அரசாளும் பெரியசாமியே!

உள்ளம் உருகிடுதே உன் பேரைக் கேட்கையிலே!

உள்ளம் உருகிடுதே, உன் பேரைக் கேட்கையிலே!

அண்டினோர்க்கு அபயம் தரும் ஐயனே!
உந்தன் திருக்காட்சியில்
எந்தன் நெஞ்சம் நிறைகிறதே


சந்தம் பாடியே, சந்நிதி முன் வந்தேனே;

சந்தம் பாடியே, சந்நிதி முன் வந்தேனே;

அன்பால் அணைக்கின்றாய், அருள்மழை பொழிகின்றாய்;

எம் குறை தீர்த்திடும் எங்கள் பெரியசாமி!

நானிலம் போற்றிடும் நாயகன் நீயே!

பலவழி கடந்து வந்த காரிய சித்தனே!

பக்தர்கள் துயர்தீர்க்கும் பரம்பொருளே!
 என்றென்றும் எம்மை காத்திடுவாயே!!!

அண்டமெலாம்

அண்டமெலாம் ஆளும் சக்தி, அனல் மூச்சில் உறைந்ததே!!!

பிண்டத்துள் கோடி ரகசியம், பிரம்ம நாடி சிறந்ததே!!!

கண்டறிய மூல நாடி, கனல் எழுப்பும் குண்டலி!!!

விண்டதெல்லாம் பொய்மையடா, விழி மூடி உணர்ந்திடு!!!

ஏழாதார சக்கரம், ஆதிசக்தி நிலையமே!!!

ஊறும் அமுதம் உயர, உயிர் நாடி துணையே!!!

பேறும் பெருமை வேண்டாமே, பேரின்ப சுகந்தனை!!!

தேறும் ஞானம் சித்தியடா, தெய்வமாய் ஒளிர்ந்திடு!!! 

தை திருவிழா 2026