ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருபுளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி
ஐந்து வீட்டு சுவாமிகள்
ஆத்திசுவாமி
-----------------------
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பழனியப்பபுரம் கிராமத்தில் பக்தர் ஒருவரால் ஆத்திசுவாமிக்கு நேர்ச்சையாக விடப்பட்ட ஆட்டுகிடாய் ஒன்று அருகில் உள்ள வேற்று மதத்தினர் ஒருவரின் தோட்டத்தில் மேய, அதனை கோவில் கிடா என்றும் பாராமல் தடியால் அடிக்க, கிடாய்க்கு சொந்தக்காரர், அடித்த நபர் தெய்வ நிந்தனைக்கு ஆட்பட்டு விடக்குடாது என்று கருதி ஆத்திசசுவாமி கோயில் கிடாய் என்று கூற, தோட்டக்காரர் உடனே ஆத்திசுவாமி கிடாய்க்கு என்ன? மூன்று கொம்புகளா என அகங்காரமாக கேட்க, ஆத்திசுவாமி அருளால் உடனே அந்த கிடாய்க்கு அன்றிலிருது மூன்றவதாக ஒரு கொம்பும் முளைத்த அதிசயம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததும், அந்த கிடாய் கோவில் பணிவிடைக்கு கொண்டுவரப்பட்டதும் மெய் சிலிர்க்க வைத்த நிகழ்ச்சியாகும்.
ஆட்டுகிடாய் மேல் விழுந்த அடி ஆத்திசுவாமி மேல் விழுந்த அடியாக நினைத்து பதறிய பக்தருக்கு, நான் உன்னுடன இருக்கிறேன் என்பதை உணர்த்தவும், அகங்காரமாக பெசியவனின் மமதையை அடக்கவும் இந்த அற்புதம் நிகழ்நதுள்ளது.
இதனால் நாம் முழு மனதோடு ஆத்திசுவாமி மேல் நம்பிக்கை வைத்தால் அவர் நம்முடன் இருந்து நம்மை காத்து வழி நடத்துவார் என்பது தெளிவாகிறது .
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

















சாதாரண நாட்களில் சுவாமியை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள் 
